- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் ஒரே போட்டியில் அதிகபட்ச ரன்களை அடித்த இந்திய வீரர் யார் தெரியுமா? – விவரம் இதோ

எட்டு நாடுகள் பங்கேற்கும் ஒன்பதாவது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி முதல் மார்ச் 9-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும்? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ள வேளையில் இந்த போட்டி துவங்க இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ளன. இதன் காரணமாக இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஒரே போட்டியில் அதிக ரன் அடித்த இந்திய வீரர் யார் ?:

இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் அணி நியூஸிலாந்து அணிக்கு எதிராக பிப்ரவரி 19-ஆம் தேதி விளையாட இருக்கிறது. அதனை தொடர்ந்து இந்திய அணியானது தங்களது முதல் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக துபாய் மைதானத்தில் பங்கேற்க இருக்கிறது. இந்நிலையில் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடர் குறித்தும் அதில் சாதித்த இந்திய வீரர்கள் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

- Advertisement -

அந்த வகையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணிக்காக விளையாடி ஒரே போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர் யார்? என்பது குறித்த தகவலை இங்கு காணலாம். அந்த வகையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியின் நான்கு வீரர்கள் சதம் அடித்துள்ளனர். அதில் அதிகபட்சமாக கங்குலி ஆட்டமிழக்காமல் 141 ரன்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார்.

சவுரவ் கங்குலி 141*:கடந்த 2000-ஆவது ஆண்டு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 142 பந்துகளை சந்தித்த அவர் 11 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் என 141 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது சிறப்பான ஆட்டம் காரணமாக இந்திய அணி அந்த போட்டியில் வெற்றி பெற்றிருந்தது.

- Advertisement -

சச்சின் டெண்டுல்கர் 141 : கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் முறையாக சாம்பியன்ஸ் டிராபி தொடரானது நடைபெற்ற வேளையில் அந்த தொடரின் ஒரு போட்டியில் டாக்கா மைதானத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சச்சின் 128 பந்துகளை சந்தித்து 141 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்திருந்தார்.

இதையும் படிங்க : ஸ்ரேயாஸ், பண்ட் ஐபிஎல் சம்பளம் விட குறைவு.. 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கான பரிசுத்தொகையை வெளியிட்ட ஐசிசி

வீரேந்திர சேவாக் 126 : கடந்த 2002 ஆம் ஆண்டு கொழும்பு நகரில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போட்டியின் போது இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாடிய அவர் 126 ரன்களை குவித்து அசத்தியிருந்தார். அதே போட்டியில் கங்குலியும் 117 ரன்கள் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஷிகர் தவான் 125 : கடந்த 2017 ஆம் ஆண்டு லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 128 பந்துகளை சந்தித்து 125 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.

- Advertisement -