IND vs WI : 2வது போட்டியில் பிரசித் கிருஷ்ணா அதிரடியாக நீக்கப்பட்டு ஆவேஷ் கான் சேர்க்கப்பட காரணம் என்ன – ஒரு அலசல்

Prasidh-1
- Advertisement -

வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்று அசத்தியது. குயின்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 309 ரன்கள் இலக்கை கடைசி பந்து வரை வெறித்தனமாக துரத்திய வெஸ்ட் இண்டீஸ் முடிந்த அளவுக்கு போராடிய போதிலும் 305 ரன்கள் மட்டுமே எடுத்து பரிதாபமாக தோற்றது. அதனால் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 2-வது போட்டி ஜூலை 24-ஆம் தேதி இரவு 7 மணிக்கு துவங்கியது.

Siraj

- Advertisement -

அப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் இம்முறை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. சொந்த மண்ணில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் தலைநிமிர அப்போட்டியில் வென்றே தீரவேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. மறுபுறம் முதல் போட்டியில் நூலிழையில் வெற்றியை சுவைத்த இந்தியா 2-வது போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்டு அபாரமான வெற்றியை பெறுவதற்காக களமிறங்கியது. அதன் காரணமாக முதல் போட்டியில் வெற்றியை பதிவு செய்திருந்த போதிலும் இளம் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா அதிரடியாக நீக்கப்பட்டு ஆவேஷ் கான் அறிமுகமாக களமிறங்கினார்.

ரசிகர்கள் குழப்பம்:
பெரும்பாலும் வெற்றி பெற்றால் அந்த கூட்டணியை தொடர வேண்டும் என்பதே வெற்றியின் ரகசியம் என்று கூறுவார்கள். அப்படிப்பட்ட நிலையில் முதல் போட்டியில் வெற்றியை பதிவு செய்திருந்த இந்தியா ஏன் 2-வது போட்டியில் பிரசித் கிருஷ்ணாவை நீக்கியது. இத்தனைக்கும் முதல் போட்டியில் 10 ஓவர்கள் வீசிய அவர் விக்கெட் எடுக்கவில்லை என்றாலும் ஒரு மெய்டன் உட்பட 62 ரன்களை 6.2 என்ற எக்கனாமியில் மோசமாக அல்லாமல் ஓரளவு சிறப்பாகவே பந்துவீசி இருந்தார். அதனால் 2-வது போட்டியில் ஏன் அவர் நீக்கப்பட்டார் என்ற குழப்பம் ரசிகர்களிடம் காணப்படுகிறது. அதற்கான முக்கிய காரணங்களைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்:

Avesh Khan

காரணம் என்ன:
1. முதலில் இளம் பந்துவீச்சாளராக இருக்கும் பிரசித் கிருஷ்ணா ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதால் கடந்த வருடம் அறிமுகமாகி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 20 விக்கெட்டுகளை 5.20 என்ற நல்ல எக்கனாமியில் எடுத்து வருகிறார்.

- Advertisement -

2. அந்த வகையில் அவரின் ஒட்டுமொத்த பந்துவீச்சு பார்ப்பதற்கு சிறப்பாக இருந்தாலும் நீண்ட காலம் சிறப்பாக விளையாடுவதற்கு தேவையான லைன், லென்த், வேரியேஷன் போன்ற அம்சங்களில் அவர் சுமாராகவே செயல்பட்டு வருகிறார்.

prasidh 1

3. பெரும்பாலும் வேகத்தை நம்பியிருக்கும் அவர் தனது முதல் ஆயுதமாக பவர்பிளே ஓவர்களில் புதிய பந்தை பயன்படுத்தி தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு சிறப்பாக செயல்படுகிறார். அதுபோக மிடில் ஓவர்களில் ஷார்ட் பிட்ச் மற்றும் பவுன்சர் ஆகிய அடுத்த 2 ஆயுதங்களை வைத்து முடிந்தளவுக்கு வெற்றி காண்கிறார்.

- Advertisement -

4. ஆனால் பேட்ஸ்மேன்கள் பவுண்டரிகளை அடிக்க துடிக்கும் கடைசி கட்ட ஓவர்களில் ஷார்ட் பிட்ச் பந்துகளை திறம்பட எதிர்கொள்ள தெரிந்த வெளிநாட்டு பேட்ஸ்மென்கள் ஸ்லோ பந்துகள், ஆஃப் கட்டர் போன்ற விவேகமில்லாத அவரின் வேகத்தைப் பயன்படுத்தி சரமாரியாக அடிக்கிறார்கள். அதனால் முதல் 7 ஓவர்களில் 25 – 30 ரன்களை கொடுக்கும் அவர் கடைசி 3 ஓவர்களில் 20 – 25 ரன்களை வாரி வழங்குவதே அவரின் இடம் பறிபோக காரணமாக அமைந்துள்ளது.

Prasidh

5. இந்த பிரச்சனை ஐபிஎல் தொடரிலும் நீண்ட காலங்களாகவே அவருக்கு இருந்து வருகிறது. குறிப்பாக 2022 ஐபிஎல் தொடரில் குஜராத்துக்கு எதிராக நடந்த குவாலிஃபயர் 1 போட்டியில் 189 ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் ராஜஸ்தான் தோல்வியடைய இவர் முக்கிய காரணமாக இருந்தார்.

ஏனெனில் 3.3 ஓவர்களை வீசிய அவர் எஞ்சிய பவுலர்களை விட 11.43 என்ற மோசமான எக்கனாமியில் வாரி வழங்கினார். எனவே விரைவில் இதை அவர் சரி செய்ய வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

Avesh Khan 1

அசத்தல் ஆவேஷ்:
மறுபுறம் இப்போட்டியில் வாய்ப்பு பெற்ற ஆவேஷ் கான் ஆரம்பத்திலேயே புதிய பந்தை 2 புறங்களிலும் ஸ்விங் செய்யும் திறமை பெற்றுள்ளார். மேலும் போட்டி நகர நகர சரியான லைன், லென்த் போன்ற அம்சங்களுடன் கடைசி நேரத்தில் கட்டர், ஸ்லோ பந்துகள், வேகம் என அனைத்து விவேகங்களையும் பயன்படுத்தி குறைவான ரன்களை கொடுக்கும் வகையில் பந்து வீசிகிறார். அந்த திறமையை ஐபிஎல் தொடரில் லக்னோ அணியில் வெளிப்படுத்திய காரணத்தாலேயே தற்போது இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

Advertisement