வயசு என்ன தம்பி.. காம்ப்ளி மாதிரி ஆகமாட்டாரு.. விக்னேஷ் தோளில் தட்டி தோனி பாராட்டியது என்ன? நண்பர் பேட்டி

MS Dhoni VIgnesh
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களது முதல் போட்டியில் பரம எதிரி மும்பையை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. மார்ச் 23ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய மும்பை 156 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதைத் துரத்திய சென்னைக்கு கேப்டன் 53, ரச்சின் ரவீந்திரா 65* ரன்களை அடித்து கடைசி ஓவரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.

மறுபுறம் மும்பை அணிக்கு அதிகபட்சமாக 24 வயது இளம் வீரர் விக்னேஷ் புதூர் 3 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. கேரளாவைச் சேர்ந்த அவர் சீனியர் கிரிக்கெட்டில் பெரியளவில் விளையாடிய அனுபவத்தைக் கொண்டிருக்கவில்லை. இருப்பினும் ஜூனியர் லெவலில் உள்ளூரில் சிறப்பாக விளையாடிய அவரை மும்பை நிர்வாகம் கண்டறிந்தது.

- Advertisement -

பாராட்டிய தல தோனி:

அதனால் அவரை தென்னாபிரிக்காவுக்கு அழைத்துச் சென்ற மும்பை அணி நிர்வாகம் எஸ்ஏ20 தொடரில் ரசித் கான் போன்ற நட்சத்திர வீரர்களுடன் பயிற்சி எடுக்கும் வாய்ப்புகளை கொடுத்தது. அங்கே அசத்தியதால் 30 லட்சம் அடிப்படை விலைக்கு அவரை ஏலத்தில் வாங்கிய மும்பை நிர்வாகம் முதல் போட்டியிலேயே வாய்ப்பைக் கொடுத்தது. அந்த வாய்ப்பில் மூன்று விக்கெட்டுகள் எடுத்த விக்னேஷ் சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய சவாலை கொடுத்தார்.

அவரது திறமையைப் பார்த்து வியந்த ஜாம்பவான் எம்எஸ் தோனி போட்டியின் முடிவில் விக்னேஷ் தோளில் தட்டி பாராட்டியது அவரையும் ரசிகர்களையும் நெகிழ்ச்சியடைய வைத்தது. இந்நிலையில் அந்த தருணத்தில் தோனி என்ன சொன்னார் என்பதைப் பற்றி விக்னேஷின் உள்ளூர் நண்பர் ஸ்ரீரங் பகிர்ந்துள்ளார். இது பற்றி இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

தோனி சொன்னது என்ன:

“தோனி உன்னிடம் என்ன சொன்னார்? என்று அவரிடம் கேட்டேன். ஏனெனில் என்னுடைய பெற்றோர்கள் உட்பட பலரும் அதைத் தெரிந்து கொள்ள விரும்பினர். விக்னேஷிடம் உங்களுக்கு வயது என்ன? என்று தோனி கேட்டார். பின்னர் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு என்ன செய்தீர்களோ அதையே தொடர்ந்து செய்யுங்கள் என்று தோனி சொன்னதாக விக்னேஷ் என்னிடம் கூறினார்”

இதையும் படிங்க: எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது தெரியல.. இவ்ளோ சொதப்பியும் ஜெயிக்க இதான் காரணம்.. அக்சர் பேட்டி

“மேலும் இது போன்ற தருணங்களில் நீங்கள் உங்களுடைய ஆணிவேருக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று நான் விக்னேஷிடம் சொன்னேன். ஏனெனில் வேகமான புகழ் மற்றும் பணம் வீரர்களை என்னவாக்கும் என்பதை நாம் வினோத் காம்ப்ளி, பிரிதிவி ஷா ஆகியோரிடம் பார்த்துள்ளோம். அதனால் இந்த ஒரு போட்டி விக்னேஷை சிறந்தவராக அல்லது மோசமானவராக மாற்றாது” என்று தனது நண்பன் பற்றி பேசி முடித்தார்.

Advertisement