எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது தெரியல.. இவ்ளோ சொதப்பியும் ஜெயிக்க இதான் காரணம்.. அக்சர் பேட்டி

Axar Patel
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மார்ச் 24ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற நான்காவது போட்டியில் லக்னோவை வெறும் 1 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ 210 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரான் 75, மிட்சேல் மார்ஷ் 72 ரன்கள் எடுத்தார்கள்.

அடுத்ததாக விளையாடிய டெல்லி கேப்டன் அக்சர் படேல் உள்ளிட்ட முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை இழந்து 60-5 என ஆரம்பத்திலேயே தடுமாறியது. அப்போது அசுடோஸ் சர்மா 66* (31), ட்ரிஷன் ஸ்டப்ஸ் 34 (22), விப்ராஜ் நிகாம் 39 (15) ரன்கள் அடித்து 19.3 ஓவரில் டெல்லியை திரில் வெற்றி பெற வைத்தனர். மறுபுறம் லக்னோ கையில் வைத்திருந்த வெற்றியை கோட்டை விட்டு சொதப்பியது.

- Advertisement -

எனக்கு மட்டும் ஏன்:

இந்நிலையில் எனக்கு மட்டும் இப்படி ஏன் நடக்குது என்ற வகையில் டெல்லி கேப்டன் அக்சர் படேல் கூறியுள்ளார். அதாவது தம்முடைய கேப்டன்ஷிப்பில் பல தருணங்களில் இப்படி கைநழுவிய வெற்றிகள் இன்று கிடைத்துள்ளதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் 15 ஓவர்கள் சுமாராக பவுலிங் செய்து, சில கேச்சுகளை விட்டு, பேட்டிங்கில் சொதப்பியும் வெற்றி பெற்றதற்கு கடைசி 6 ஓவரில் சிறப்பாக செயல்பட்டு லக்னோவை 230 – 250 ரன்களை தொடவிடாமல் செய்ததே காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது பற்றி அக்சர் படேல் பேசியது பின்வருமாறு. “இது போன்ற போட்டிகளை பார்த்துப் பழகி விட்டேன். என்னுடைய கேப்டன்ஷிப்பில் மட்டுமே இப்படி ஏற்ற இறக்கங்கள் நடக்கிறது. இம்முறை நாங்கள் வெற்றி பெற்றதால் ட்ரிஷன் ஸ்டப்ஸ்க்கு ஏன் அந்த ஓவரை கொடுத்தீர்கள் என்று மக்கள் யாரும் புகார் சொல்ல மாட்டார்கள். இப்படி பவர் பிளே ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழந்தும் கடைசியில் வெற்றி பெறுவதை அதிகம் பார்க்க முடியாது”

- Advertisement -

போராடி வெற்றி:

“கடைசியாக அதை எப்போது பார்த்தேன் என்று எனக்கு நினைவில்லை. முதல் 6 ஓவர்களில் லக்னோ பேட்ஸ்மேன்கள் விளையாடிய விதத்தை பார்த்த போது நாங்கள் கொஞ்சம் அதிகம் ரன்கள் வழங்கி விட்டோமோ என்று நினைத்தோம். நாங்கள் சில முக்கிய கேட்ச்களையும் விட்டோம். அதனால் அவர்கள் 230 – 250 ரன்கள் அடிப்பார்கள் என்று எதிர்பார்த்தோம்”

இதையும் படிங்க: 2025 ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டியில் கே.எல் ராகுல் விளையாடாதது ஏன்? – நற்செய்தியை வெளியிட்ட அதியா ஷெட்டி

“ஆனால் கடைசியில் அவர்களை 200+ ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது எங்களுக்கு தன்னம்பிக்கையை கொடுத்தது. கடினமாக உழைக்கும் எங்களுடைய வீரர்களிடம் திறன் இருக்கிறது என்பது தெரியும். முதல் போட்டியிலேயே இப்படி அழுத்தமான சூழ்நிலையில் பேட்டிங் செய்தது தன்னம்பிக்கையை கொடுத்துள்ளது. விப்ராஜ் நிகாம் விளையாடிய விதத்திற்கு பாராட்டு கொடுக்க வேண்டும். எங்கள் வீரர்கள் இப்படியே தொடர்வார்கள் என்று நம்புகிறேன்” எனக் கூறினார்.

Advertisement