- Advertisement -
உலக கிரிக்கெட்

காத்திருக்கும் தடை.. இங்கிலாந்தை நாக் அவுட் செய்ய நினைக்கும் ஆஸியை எச்சரிக்கும் 2.11 ஆர்ட்டிக்கல் விதிமுறை

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை விறுவிறுப்பான துவக்கத்தை பெற்றுள்ளது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிகள் சூப்பர் 8 சுற்று தகுதி பெற்று விட்டன. மீதமுள்ள 3 இடத்தை பிடிப்பதற்கு அமெரிக்கா, ஸ்காட்லாந்து, இங்கிலாந்து, வங்கதேசம் போன்ற அணிகளிடம் போட்டி காணப்படுகிறது.

முன்னதாக இத்தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அடித்து நொறுக்கி முதல் அணியாக சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதலிரண்டு போட்டிகளில் ஒரு வெற்றியை கூட பதிவு செய்த அந்த அணி ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்தது. மறுபுறம் ஸ்காட்லாந்து 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பதிவு செய்து 5 புள்ளிகளை பெற்றுள்ளது.

- Advertisement -

எச்சரிக்கும் விதிமுறை:
இந்த நிலையில் ஓமனுக்கு எதிராக நடைபெற்ற 3வது போட்டியில் இங்கிலாந்து அதிரடியான வெற்றி பெற்றது. அதனால் நமீபியாவுக்கு எதிரான தங்களுடைய கடைசி போட்டியில் இங்கிலாந்து வென்றால் சூப்பர் 8சுற்றுக்குச் செல்ல வாய்ப்புள்ளது. இருப்பினும் அதற்கு 5 புள்ளிகளை பெற்றுள்ள ஸ்காட்லாந்தை ஜுன் 16ஆம் தேதி நடைபெறும் தங்களுடைய கடைசி போட்டியில் ஆஸ்திரேலியா வீழ்த்த வேண்டும்.

ஆனால் இங்கிலாந்து தங்களுடைய பரம எதிரி என்றும் அவர்களுக்கு எதிராக தாங்கள் டி20 கிரிக்கெட்டில் தடுமாறுவதாகவும் ஆஸ்திரேலிய வீரர் ஜோஸ் ஹேசல்வுட் தெரிவித்தார். எனவே இங்கிலாந்தை லீக் சுற்றுடன் வெளியேற்றுவதற்கான வேலையை ஸ்காட்லாந்து போட்டியில் ஆஸ்திரேலியா செய்யும் என்று அவர் மறைமுகமாக தெரிவித்தார். சொல்லப்போனால் 1999 உலகக் கோப்பையில் சூப்பர் 6 சுற்றில் எக்ஸ்ட்ரா புள்ளிகளை பெறுவதற்காக வெஸ்ட் இண்டீஸிடம் வேண்டுமென்றே ஆஸ்திரேலியா மெதுவாக விளையாடியது.

- Advertisement -

அதற்காக வெறும் 111 ரன்கள் இலக்கை சேசிங் செய்ய 40.4 ஓவர்கள் எடுத்துக்கொண்ட ஆஸ்திரேலியா வேண்டுமென்றே மெதுவாக விளையாடியது. எனவே இம்முறை இங்கிலாந்தை வெளியேற்ற ஆஸ்திரேலிய அணி ஸ்காட்லாந்திடம் தோற்பதற்கும் தயங்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதை செய்வதற்கு ஐசிசி ஆர்ட்டிக்கல் 2.11 விதிமுறையை ஆஸ்திரேலியா மீற வேண்டும்.

இதையும் படிங்க: முடிஞ்சு போனதா எழுதாதீங்க.. இப்போவும் அவர் கம்பேக் கொடுத்து சாதனை படைப்பாரு.. வாசிம் ஜாபர் உறுதி

அதாவது “பொருத்தமற்ற தந்திரோபாய காரணத்திற்காக ஒரு அணி வேண்டுமென்றே ஐசிசி தொடரின் லீக் போட்டியில் தோல்வியடையும் போது மற்ற அணிகளின் நிலைகள் பாதிக்கும்” என்பது 2.11 விதிமுறையாகும். இதை மீறி வேண்டுமென்றே எதாவது செய்தால் அந்த அணியின் கேப்டனுக்கு 4 கருப்பு புள்ளிகள், 50% அபராதம் மற்றும் 2 போட்டிகள் விளையாட தடை விதிக்கப்படும். எனவே இங்கிலாந்தை வெளியேற்ற முயற்சித்தால் சூப்பர் 8 சுற்றின் முதலிரண்டு போட்டிகளில் கேப்டன் மிட்சேல் மார்ஷ் விளையாட தடை பெறுவார் என்பது ஆஸ்திரேலியா

- Advertisement -