IPL 2023 : என் அணியை சீண்டுவது எனது குடும்பத்தை திட்டுற மாதிரி – கோலிக்கு சண்டையில் கம்பீர் கொடுத்த பதிலடி இதோ

Virat Kohli Gambhir.jpeg
- Advertisement -

அனல் பறந்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 1ஆம் தேதி நடைபெற்ற 43வது லீக் போட்டியில் லக்னோவை 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்கடித்தது. இருப்பினும் அந்த போட்டியின் முடிவில் இந்தியாவின் ஜாம்பவான்களாக கருதப்படும் விராட் கோலி மற்றும் கௌதம் கம்பீர் ஆகியோர் நேருக்கு நேராக சண்டை போட்டது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த போட்டியில் வெற்றி பறிபோன நிலையில் கடைசி நேரத்தில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த இளம் வீரர் நவீன்-உல்-ஹக் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது ஒரு பந்தில் வெள்ளை கோட்டுக்கு உள்ளே வந்தும் முகமது சிராஜ் கோபத்தால் ரன் செய்யும் முயற்சித்தார்.

Naveen Ul Haq Fight

- Advertisement -

அதனால் அடுத்த சில ஓவர்களில் அதிருப்தியில் இருந்த அவருக்கும் அருகில் நின்று கொண்டிருந்த விராட் கோலிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட போது அமித் மிஸ்ரா மற்றும் அம்பயர் உள்ளே புகுந்து சண்டை வராமல் தடுத்து நிறுத்தினர். அத்துடன் போட்டி முடிந்த பின் இரு அணி வீரர்களும் கை கொடுத்துக் கொண்ட போது மீண்டும் விராட் கோலி – நவீன் ஆகியோரிடையே ஏற்பட்ட மோதலை கிளன் மேக்ஸ்வெல் தடுத்தார். அவை அனைத்தையும் ஃபெவிலியனிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த கௌதம் கம்பீர் பயிற்சியாளராக சண்டையை விலக்காமல் முதல் ஆளாக விராட் கோலியுடன் தனது ஸ்டைலில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

கம்பீரின் பதிலடி:
இறுதியில் இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் நடுவர்களும் கை கலப்பு ஆகாத அளவுக்கு சண்டையை தடுத்து நிறுத்தினர். அத்துடன் கேஎல் ராகுல் சமாதானம் செய்ததால் கை கொடுக்க வந்த விராட் கோலிக்கு பேசுவதற்கு எதுவுமில்லை என்ற வகையில் நவீன் திமிராக சென்றது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது. அப்படி ஜென்டில்மேன் விளையாட்டில் மிகப்பெரிய சண்டையில் ஈடுபட்ட விராட் கோலி மற்றும் கம்பீர் ஆகியோருக்கு அப்போட்டி சம்பளத்திலிருந்து 100% அபராதமும் நவீனுக்கு 50% அபராத்தையும் ஐபிஎல் நிர்வாகம் அதிரடியாக விதித்தது.

இந்நிலையில் அந்த பரபரப்பான தருணத்தில் தனது அணியை சேர்ந்த நபரை சீண்டுவது தனது குடும்பத்தில் இருக்கும் நபரை திட்டுவதற்கு சமம் என்ற வகையில் விராட் கோலிக்கு நேரடியாக கௌதம் கம்பீர் பதிலடி கொடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. அந்த தருணத்தில் அருகிலிருந்து சண்டையை நேரில் பார்த்த லக்னோ அணியை சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத நபர் ஒருவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“போட்டி முடிந்ததும் கெய்ல் மேயர்ஸ் மற்றும் விராட் கோலி ஆகியோர் சில மீட்டர் தூரங்கள் ஒன்றாக நடந்ததை நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். அப்போது கெயில் மேயர்ஸ் நீங்கள் ஏன் தொடர்ந்து எங்களது அணி வீரர்களை திட்டுகிறீர்கள் என்று விராட் கோலியிடம் கேட்டார். அதற்கு முதலில் நீங்கள் ஏன் சம்பந்தமின்றி என்னை இப்போது முறைத்து பார்க்கிறீர்கள் என விராட் கோலி அவருக்கு பதிலளித்தார். அதற்கு முன்பாக நவீனை தொடர்ந்து விராட் கோலி திட்டுவதாக அமித் மிஸ்ரா நடுவரிடம் போட்டியின் போது புகார் செய்தார்”

Virat Kohli Gautam Gambhir

“அப்படி சண்டையாக மாறிய அந்த நிகழ்வை பார்த்ததால் விராட் கோலியிடம் பேசாமல் சொல்லுமாறு கெய்ல் மேயர்ஸை அங்கிருந்து கம்பீர் அனுப்பி வைத்தார். அதைத்தொடர்ந்து தான் சண்டை ஆரம்பித்தது. குறிப்பாக “முன்னாடி என்ன சொன்னீங்க? இப்போது என்னிடம் சொல்லுங்கள்” என்று கம்பீர் கூறினார். அதற்கு உங்களைப் பற்றி எதுவும் சொல்லாத நிலையில் நீங்கள் ஏன் சம்பந்தமின்றி வருகிறீர்கள் என்று விராட் கோலி பதிலளித்தார்”

- Advertisement -

“அப்போது நீங்கள் என்னுடைய குடும்பத்தில் ஒருவரைப் போல இருக்கும் எனது அணி வீரரை திட்டியுள்ளீர்கள் என்று கம்பீர் கூறினார். அதற்கு அப்படியானால் உங்களது குடும்பத்தை பார்த்துக் கொள்ளுமாறு விராட் கோலி பதிலளித்தார். அப்படியென்றால் அதைப் பற்றி எனக்கு கற்றுக் கொடுக்குமாறு நாங்கள் சண்டையை விலக்குவதற்கு முன் கம்பீர் கடைசியாக பதிலளித்தார்” என்று கூறினார்.

இதையும் படிங்க: GT vs DC : 4 விக்கெட் எடுத்து என்ன புண்ணியம்? கடைசில இப்படி ஆயிடுச்சே – ஆட்டநாயகன் முகமது ஷமி வருத்தம்

முன்னதாக ஒரே மாநிலத்தில் பிறந்து 2011 உலகக்கோப்பை உட்பட இந்தியாவுக்காக ஒன்றாக விளையாடியிருந்தாலும் 2013இல் கொல்கத்தாவின் கேப்டனாக இருந்த போது விராட் கோலியிடம் சண்டை போட்ட கௌதம் கம்பீர் 10 வருடங்கள் கழித்தும் பகையை மறக்காமல் மீண்டும் சண்டை போட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement