இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக வர தேவையான தகுதிகள் என்ன? பிசிசிஐ ரூல்ஸ் இதோ

Roger Binny Sourav Ganguly
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக லண்டனில் நடைபெற்ற 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் தோற்று 2013க்குப்பின் தொடர்ந்து 10வது வருடமாக ஐசிசி தொடரில் மண்ணை கவ்விய இந்தியா வெறும் கையுடன் நாடு திரும்பியது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. அந்த போட்டியில் டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்றும் பேட்டிங், பவுலிங் ஆகிய அனைத்துத் துறைகளிலும் சொதப்பிய இந்தியா ரவிச்சந்திரன் அஸ்வினை தேர்வு செய்யாதது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அந்த வகையில் கடந்த 10 வருடங்களாகவே ஐசிசி தொடரில் இந்தியா தோல்வியை சந்திப்பதற்கு தரமான வீரர்கள் இருந்தும் அவர்களை சரியாக தேர்வு செய்து பயன்படுத்தாதது மறைமுக காரணமாக இருந்து வருகிறது.

TEam India Rohit Sharma

- Advertisement -

பொதுவாக அதிக போட்டிகளில் விளையாடிய முன்னாள் நட்சத்திர ஜாம்பவான் வீரர்கள் தேர்வுக்குழு தலைவராக இருந்தால் மட்டுமே அனுபவத்தால் சரியான வீரர்களை புரிந்து தேர்ந்தெடுத்து வெற்றிக்கான அணியை உருவாக்க முடியும். ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணியாக திகழும் இந்தியாவில் மட்டும் ரசிகர்களுக்கு யார் என்றே தெரியாத ஓரிரு போட்டிகளில் விளையாடிய சில முன்னாள் வீரர்கள் தேர்வுக்குழு தலைவராக வந்து சொதப்பல்களை அரங்கேற்றுவது வாடிக்கையாகி வருகிறது.

பிசிசிஐ ரூல்ஸ்:
குறிப்பாக அம்பத்தி ராயுடுவின் கேரியரை முடித்து 2019 உலக கோப்பையில் தோல்வியை சந்திப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்த எம்எஸ்கே பிரசாத்துக்கு பின் சேட்டன் சர்மா தேர்வுக்குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரும் சஞ்சு சாம்சனை தொடர்ந்து கழற்றி விட்டு தேர்வு செய்த இந்திய அணி 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் தோல்வியையே சந்தித்தது.

அதை விட பிரபல தொலைக்காட்சியின் கேமராவில் இந்திய கிரிக்கெட்டின் பின்னணியில் நடக்கும் உண்மைகளை உங்களை உளறியதால் சமீபத்தில் ராஜினாமா செய்த அவருக்கு பதிலாக தற்காலிகமாக எஸ்எஸ் தாஸ் அந்த வேலையை செய்து வருகிறார். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தேர்வுக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிக்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்குமாறு பிசிசிஐ அறிவித்துள்ளது. அதற்கான தகுதிகளைப் பற்றி பார்ப்போம்:

- Advertisement -

1. முதலில் அந்த பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 7 டெஸ்ட் போட்டிகள் அல்லது 30 உள்ளூர் முதல் தர போட்டிகள் அல்லது 10 ஒருநாள் மற்றும் 20 முதல் தர போட்டிகளில் விளையாடியிருக்க வேண்டும்.

CHetan Sharma

2. அத்துடன் அந்த பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் ஓய்வு பெற்று குறைந்தது 5 வருடங்கள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். அத்துடன் ஐபிஎல் போன்ற வேறு எந்த தொடரில் இருக்கும் அணிகளில் எந்தத் துறையிலும் உறுப்பினராக இருக்கக் கூடாது.

- Advertisement -

தேர்வுக்குழுவின் பொறுப்புகள்:
1. நியாயமான முறையில் சாத்தியமான சிறந்த அணியை தேர்ந்தெடுக்க வேண்டும். தேசிய சீனியர் அணியின் பெஞ்சில் இருக்கும் வீரர்கள் பலமானவர்களாக இருக்கும் அளவுக்கு வருங்காலத்தை திட்டமிட்டு கட்டமைக்க வேண்டும்.

Chetan Sharma Bumrah

2. இந்திய அணியின் தேவைப்படும் போதெல்லாம் நேரடியாக கலந்து கொள்ள வேண்டும். வருடம் முழுவதும் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளை நேரில் சென்று பார்த்து திறமையான வீரர்களை கண்டறிய வேண்டும்.

- Advertisement -

3. அந்த வீரர்களின் பட்டியலை அறிக்கையாக காலாண்டுக்கு ஒருமுறை நடைபெறும் பிசிசிஐ தலைமை கூட்டத்தில் ஒப்படைக்க வேண்டும். இந்திய அணியை தேர்ந்தெடுத்து வெளியிடும் போது பிசிசிஐ அறிவுறுத்தல்களை பின்பற்றி ஊடகங்களிடம் நேரடியாக பேச வேண்டும்.

Sehwag

4. ஒவ்வொரு வகையான இந்திய அணிக்கும் தரமான கேப்டன்களை நியமித்து பிசிசிஐ விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

இப்படி பொறுப்புகளில் கண்டிப்பான விதிமுறைகளை குறிப்பிட்டுள்ள பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிக்கு விண்ணப்பிப்பவர்களின் தகுதியில் தான் கோட்டை விட்டுள்ளது என்று சொல்லலாம். ஏனெனில் கணிசமான போட்டிகளில் விளையாடியிருந்தாலே போதும் என்று கூறுவதால் பெரிய அளவில் அனுபவமில்லாத முன்னாள் வீரர்கள் அப்பதவிக்கு விண்ணப்பித்து தேர்வுக்குழுவில் வந்து அமர்ந்து குளறுபடிகளை செய்கின்றனர்.

இதையும் படிங்க:கனவு மைதானத்தை தினேஷ் கார்த்திக் கையால் திறந்து வைத்த யார்க்கர் கிங் நடராஜன் – யார் யாரெல்லாம் வந்திருக்காங்க தெரியுமா?

அதை விட பணக்கார வாரியமாக கருதப்படும் பிசிசிஐ தேர்வுக்குழுவுக்கு குறைந்த சம்பளம் கொடுத்து கஞ்சத்தனம் செய்வதாலேயே விரேந்தர் சேவாக் போன்ற ஜாம்பவான் வீரர்கள் அந்த பதவியின் பக்கம் எட்டி கூட பார்ப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement