2023இல் தள்ளியது யார்? சூரியகுமார் கேட்ச்சில் பவுண்டரி நகர்ந்த உண்மையுடன்.. விமர்சனத்துக்கு இந்திய ரசிகர்கள் பதிலடி

Catch Field
- Advertisement -

ஐசிசி 2024 உலகக் கோப்பையின் மாபெரும் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அதனால் 17 வருடங்கள் கழித்து இந்திய கிரிக்கெட் அணி டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. இருப்பினும் அந்தப் போட்டியில் சூரியகுமார் யாதவ் பிடித்த கேட்ச் தற்போது பாகிஸ்தான், இலங்கை போன்ற எதிரணி ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

அதாவது அப்போட்டியில் ஹர்திக் பாண்டியா வீசிய கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்காவுக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது முதல் பந்திலேயே டேவிட் மில்லர் நேராக சிக்ஸர் அடித்தார். அதை லாங்க் ஆஃப் திசையிலிருந்து ஓடி வந்த சூரியகுமார் யாதவ் கச்சிதமாக பிடித்தார். இருப்பினும் கடைசி நேரத்தில் பேலன்ஸை இழந்த அவர் நொடி பொழுதுக்குள் பந்தை களத்திற்குள் தூக்கிப் போட்டு விட்டு பவுண்டரிக்குள் சென்றார்.

- Advertisement -

உண்மை என்ன:
அடுத்த சில நொடிக்குள் மீண்டும் களத்திற்குள் வந்த அவர் பந்தை பிடித்து இந்தியாவுக்கு கோப்பையையும் பெற்றுக் கொடுத்தார். ஆனால் அந்த இடத்தில் பவுண்டரிக்குள் செல்லும் போது சூரியகுமார் காலின் நுனிப்பகுதி எல்லையில் உரசியதாக பாகிஸ்தான் ரசிகர்கள் விமர்சிக்கின்றனர். அதற்கு ஆதாரமாக பவுண்டரி எல்லையை உரசுவது போல் தெரியும் ஜும் செய்யப்பட்ட வீடியோவையும் அவர்கள் காட்டுகின்றனர்.

இது போக அந்த கேட்ச் பிடிப்பதற்கு முன்பாகவே பவுண்டரி எல்லை வேண்டுமென்றே சில அடிகள் பின்னோக்கி நகர்த்தப்பட்டிருந்ததாகவும் பாகிஸ்தான் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். அவற்றையெல்லாம் கண்டு கொள்ளாத நடுவர்கள் இந்தியாவுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கி தென்னாப்பிரிக்காவை தோற்கடித்ததாக சமூக வலைதளங்களில் பாகிஸ்தான் ரசிகர்கள் இப்போதும் பேசி வருகிறார்கள்.

- Advertisement -

ஆனால் உண்மை என்னவெனில் சில நேரங்களில் பவுண்டரியை தடுப்பதற்காக ஓடும் ஃபீல்டர்கள் கடைசி நொடியில் டைவ் அடித்து பந்தை தடுக்க முயற்சிப்பார்கள். அந்த ஃபீல்டர் ஃஸ்லைடாகி படுத்த வாக்கில் பந்தை தடுக்க முயற்சிக்கும் போது பவுண்டரி நகர்ந்து விடும். அப்படி அறியாமல் நகர்ந்த பவுண்டரி எல்லையை நேரங்களில் ஃபீல்டர்கள் சரி செய்வதில்லை. ஒருவேளை பால் பாய் எனப்படும் பந்தை பொறுக்கிப் போடும் சிறுவர்கள் அங்கே இருந்திருந்தால் அதை சரி செய்திருப்பார்கள்.

ஆனால் உலகக் கோப்பை தொடர்களில் பவுண்டரி எல்லையில் சிறுவர்களுக்கு ஐசிசி அனுமதி கொடுப்பதில்லை. அது போலத்தான் அந்தப் போட்டியிலும் ஏதோ ஒரு தருணத்தில் பவுண்டரி நகர்ந்திருக்கக்கூடும். சொல்லப்போனால் கடந்த 2023 உலகக் கோப்பையில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் 2 அடி வரை பவுண்டரி எல்லை நகர்ந்திருந்தது. ஆனால் அதை சரி செய்யாத பாகிஸ்தான் வீரர்கள் அங்கேயே நின்று ஃபீல்டிங் செய்து பவுண்டரிகளையும் தடுத்தனர்.

இதையும் படிங்க: டி20 உலககோப்பையை தெ.ஆ அணி தவறவிட கிளாஸன் செய்த இந்த ஒரு தவறு தான் காரணம் – விவரம் இதோ

எனவே அந்தப்போட்டியில் எப்படி நகர்ந்ததோ அதே போலவே இந்தப் போட்டியிலும் பவுண்டரி நகர்ந்திருக்கும் என்று பாகிஸ்தான் ரசிகர்களுக்கு இந்திய ரசிகர்கள் ஆதாரத்துடன் பதிலடி கொடுக்கின்றனர். இது போக “சூரியகுமார் பிடித்த கேட்ச் நன்றாக இருந்தது. பவுண்டரி போட்டியின் போக்கில் நகர்ந்திருந்தது. இதற்கும் சூரியகுமாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் ஒன்றும் பவுண்டரி மேல் நிற்கவில்லை. அது புத்திசாலித்தனமான திறமை” என்று பாகிஸ்தான் ரத்துகர்களுக்கு ஏற்கனவே ஜாம்பவான் ஷான் பொல்லாக் பதில் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement