ஐசிசி உ.கோ வரலாற்றில் இங்கிலாந்துக்கு எதிரான நாக் அவுட் போட்டிகளில் இந்தியாவின் முந்தைய செயல்பாடுகள் இதோ

Virat Kohli 2013 Champions Trophy
- Advertisement -

சர்வதேச டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி டி20 உலக கோப்பை வரலாற்றில் 8வது முறையாக ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்கி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் களமிறங்கியுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா சூப்பர் 12 சுற்றில் 8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. அதை தொடர்ந்து வரும் நவம்பர் 10ஆம் தேதியன்று அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி பைனலுக்கு செல்ல இந்தியா போராட உள்ளது.

இருப்பினும் ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் இந்தியாவுக்கு 2வது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து எப்போதுமே சவாலை கொடுக்கும் அணியாக திகழ்கிறது. அதனால் 100% சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே வெற்றியை பெறக்கூடிய இந்த அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தின் சவாலை சமாளித்து இந்தியா பைனலுக்கு செல்லுமா என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 22 போட்டிகளில் இங்கிலாந்தை எதிர்கொண்ட இந்தியா 12 போட்டிகளில் வென்று முன்னிலை வகிக்கிறது.

- Advertisement -

வரலாற்று சுவடுகள்:

அதிலும் குறிப்பாக டி20 உலக கோப்பை வரலாற்றில் 3 போட்டிகளில் இங்கிலாந்தை எதிர்கொண்ட இந்தியா 2 வெற்றிகளையும் 1 தோல்விகளையும் பதிவு செய்து வலுவான செயல்பாடுகளையே வெளிப்படுத்தி வருகிறது. இந்நிலையில் வரலாற்றில் ஐசிசி தொடர்களில் இங்கிலாந்துக்கு எதிராக களமிறங்கிய நாக் அவுட் போட்டிகளில் இந்தியாவின் செயல்பாடுகளை பற்றிய வரலாற்று சுவடுகளை இந்த பதிவில் பார்ப்போம்:

1. முதல் பன்ச்: கடந்த 1983இல் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற ஐசிசி உலக கோப்பையில் கத்துக்குட்டியாக கருதப்பட்ட இந்தியா ஆரம்பம் முதலே தரமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. அதைத் தொடர்ந்து மான்செஸ்டரில் நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் டாஸ் வென்ற பாப் வில்ஸ் தலைமையிலான இங்கிலாந்து இந்தியாவின் திறமையான பந்து வீச்சில் 60 ஓவர்களில் 213 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

- Advertisement -

அதிகபட்சமாக கிராம் பிளவர் 33 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக கபில் தேவ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத் துரத்திய இந்தியாவுக்கு மொகிந்தர் அமர்நாத் 46, யாஷ்பால் சர்மா 61, சந்தீப் பாட்டில் 51* (32) என முக்கிய வீரர்கள் தேவையான ரன்களை எடுத்து 54.4 ஓவரிலேயே 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர். அப்படி முதல் நாக் அவுட் சந்திப்பிலேயே இங்கிலாந்துக்கு அதன் சொந்த மண்ணில் பஞ்ச் கொடுத்த இந்தியா இறுதியில் வலுவான வெஸ்ட் இண்டீஸ் தோற்கடித்து கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது.

2. சொந்த மண்ணில் பதிலடி: அதன்பின் கடந்த 1987இல் இந்திய மண்ணில் நடந்த உலகக்கோப்பையில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 2வது அரையிறுதியில் முதலில் பேட்டிங் செய்த மைக் கேட்டிங் தலைமையிலான இங்கிலாந்து கிரகாம் கூச் 115 ரன்கள் குவித்ததால் 50 ஓவர்களில் 254/6 ரன்களை சேர்த்தது. அதைத் துரத்திய கபில் தேவ் தலைமையிலான இந்தியா ஆரம்பம் முதலே இங்கிலாந்தின் தரமான பந்து வீச்சில் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 45.3 ஓவரில் 219 ரன்களுக்கு சுருண்டது.

- Advertisement -

அதிகபட்சமாக முகமது அசாருதீன் 64 (74) ரன்கள் எடுத்தாலும் கடந்த முறை சொந்த மண்ணில் சந்தித்த தோல்விக்கு இம்முறை அதனுடைய சொந்த மண்ணில் இந்தியாவுக்கு பதிலடி கொடுத்த இங்கிலாந்து இறுதியில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்து கோப்பையை கோட்டை விட்டது.

3. வரலாற்று மேஜிக்: அதை தொடர்ந்து கடைசியாக கடந்த 2013ஆம் ஆண்டு இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் அசத்தி இவ்விரு அணிகளும் ஃபைனலில் மோதின. மழையால் 20 ஓவர்களாக குறைக்கப்பட்ட அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த எம்எஸ் தோனி தலைமையிலான இந்தியா விராட் கோலியின் 43 (34) ரன்கள் உதவியுடன் 20 ஓவர்களில் 129 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதை துரத்திய அலெஸ்டர் குக் தலைமையிலான இங்கிலாந்து மோர்கன் 33, ரவி போபாரா 30 ஆகியோரது அதிரடியான ரன்களால் எளிதாக வெல்லும் என்று எதிர்பார்ப்பது. ஆனால் 18வது ஓவரில் ஏற்கனவே அதிகப்படியான ரன்களை வழங்கியும் கேப்டன் தோனி நம்பி கொடுத்த வாய்ப்பில் அந்த இருவரையும் காலி செய்த இசாந்த் சர்மா திருப்பு முனையை ஏற்படுத்தினார். அதை பயன்படுத்தி கடைசி 2 ஓவரில் அபாரமாக செயல்பட்ட இந்தியா வெறும் 5 ரன்கள் வித்தியாசத்தில் கோப்பையை வென்றதையும் இறுதியில் விராட் கோலி கங்ணம் டான்ஸ் போட்டதையும் ரசிகர்கள் மறக்கவே முடியாது.

Advertisement