ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியல் : பாதாளத்தில் திணறும் ஆர்சிபி.. பிளே செல்ல வாய்ப்பிருக்கா? கால்குலேட்டர் முடிவுகள்

RCB 24
- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை ஐபிஎல் 2024 டி20 தொடர் மகிழ்வித்து வருகிறது. இத்தொடரில் தங்களுடைய முதல் கோப்பையை வெல்லும் இலட்சியத்துடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வழக்கம் போல தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக இந்த வருடம் நடைபெற்ற மகளிர் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி கோப்பையை வென்றது.

அதனால் ஆடவர் அணியும் இம்முறை கண்டிப்பாக கோப்பையை வென்று சாதனை படைக்கும் என்று பெங்களூரு ரசிகர்கள் எதிரணிகளுக்கு சவாலை விட்டு ஆசை ஆசையை காத்திருந்தனர். ஆனால் வழக்கம் போல அந்த அணிக்கு பேட்டிங் துறையில் விராட் கோலி, தினேஷ் கார்த்திக் ஆகியோர் பேட்டிங்கில் ஓரளவு போராடி தேவையான ரன்கள் எடுக்கின்றனர்.

- Advertisement -

பிளே ஆஃப் வாய்ப்பிருக்கா:
ஆனால் பந்து வீச்சில் அதை அப்படியே எதிரணிக்கு வள்ளலாக வாரி வழங்கும் ஆர்சிபி பவுலர்கள் தோல்வியை சந்திப்பதற்கு முக்கிய காரணமாக இருந்து வருகின்றனர். அதனால் இந்த பவுலிங்கை வைத்துக்கொண்டு ஆர்சிபி கோப்பையை வெல்ல முடியாது என்ற கருத்துக்கள் காணப்படுகின்றன. அதன் காரணமாக 6 போட்டிகளில் 5 தோல்விகளை பதிவு செய்துள்ள அந்த அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் தவிக்கிறது.

குறிப்பாக ஏப்ரல் 12ஆம் தேதி லக்னோவை தோற்கடித்த டெல்லி 2வது வெற்றியை பதிவு செய்ததால் பெங்களூரு அணி தற்போது 10வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதனால் ஆரம்பத்திலேயே தங்களுடைய அணி பிளே ஆஃப் செல்லுமாறு என்ற கவலையுடன் பெங்களூரு ரசிகர்கள் கால்குலேட்டரை கையிலெடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பொதுவாக பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கு குறைந்தபட்சம் 14 புள்ளிகள் தேவைப்படும்.

- Advertisement -

ஹைதராபாத் போன்ற அணிகள் ரன் ரேட் உதவியுடன் வெறும் 12 புள்ளிகளை வைத்து பிளே ஆஃப் சென்ற வரலாறும் உள்ளது. ஆனால் கேரண்டியாக பிளே ஆஃப் செல்வதற்கு 14 புள்ளிகளை பெறுவது அவசியமாகும். எனவே இன்னும் 8 போட்டிகளில் விளையாட உள்ள பெங்களூரு அதில் குறைந்தபட்சம் 6 வெற்றிகளை பெற்றால் 14 புள்ளிகளுடன் பிளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்பு 99% உறுதியாகும்.

இதையும் படிங்க: இப்போதுள்ள ஃபார்முக்கு அவர் 2024 டி20 உ.கோ இந்திய அணியில் செலக்ட்டான ஆச்சர்யப்படாதீங்க.. வாசிம் ஜாபர்

5 வெற்றிகளை பெற்றால் நல்ல ரன் ரேட்ரை பெற்றிருக்கும் பட்சத்தில் 12 புள்ளிகளுடன் 4வது அணியாக பிளே ஆஃப் செல்ல 70% வாய்ப்புள்ளது. 2009, 2011 ஆகிய வருடங்களில் இதே போல 4 தொடர்ச்சியான தோல்விகளை பெற்ற பெங்களூரு அணி ஆரம்பத்தில் புள்ளிப்பட்டியலில் கீழ் வரிசையில் தடுமாறியது. ஆனால் அதன் பின் கொதித்தெழுந்த அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று ஃபைனல் வரை சென்றது. எனவே அதே போன்ற மேஜிக்கை இம்முறையும் ஆர்சிபி நிகழ்த்துமா என்பதே அந்த அணி ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

Advertisement