ஆசிய கோப்பை 2022 : இனியும் இந்தியாவுக்கு வாய்ப்பு இருக்கா? பைனலுக்கு செல்வதற்கான வழிகள் இதோ

IND vs SL
Advertisement

ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று வரும் 2022 ஆசிய கோப்பையில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா லீக் சுற்றில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றாலும் சூப்பர் 4 சுற்றில் பரம எதிரியான பாகிஸ்தானிடம் போராடி தோல்வியடைந்தது. அதனால் பைனலுக்கு செல்ல நிச்சயம் வென்றே தீரவேண்டும் என்ற நிலைமையில் செப்டம்பர் 6ஆம் தேதியான நேற்று துபாயில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான வாழ்வா – சாவா போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் போராடி 173/8 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

Suryakumar Yadav

கேஎல் ராகுல் 6, விராட் கோலி 0, ஹர்திக் பாண்டியா 17, ரிஷப் பண்ட் 17, தீபக் ஹூடா 3 என என முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய இந்தியாவுக்கு அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 5 பவுண்டரி 4 சிக்சர்களை பறக்கவிட்டு மிரட்டலான 72 (41) ரன்கள் சேர்த்தார். அதை தொடர்ந்து 174 ரன்களை துரத்திய இலங்கைக்கு ஆரம்பத்திலேயே இந்திய பவுலர்களை பிரித்து மேய்ந்து 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதி செய்த ஓப்பனிங் ஜோடியில் நிஷாங்கா 4 பவுண்டரி 2 சிக்சருடன் 52 (37) ரன்களும் குசால் மெண்டிஸ் 4 பவுண்டரி 3 சிக்சருடன் 57 (37) ரன்களும் குவித்து ஆட்டமிழந்தார்கள்.

- Advertisement -

அதன் பின் அஸலாங்கா 0, குணதிலகா 1 என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினாலும் கடைசி நேரத்தில் ஏற்பட்ட அழுத்தத்திற்கு அஞ்சாமல் அசத்தலாக பேட்டிங் செய்த ராஜபக்சா 25* (17) ரன்களும் கேப்டன் தசுன் சனாக்கா 4 பவுண்டரி 1 சிக்சருடன் 33* (18) ரன்களும் குவித்து சூப்பர் பினிஷிங் கொடுத்தனர்.

IND vs SL Arsheep Singh

வெளியேறியதா இந்தியா:
அதனால் 19.5 ஓவரில் 174/4 ரன்களை எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இலங்கை ஏற்கனவே ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் சூப்பர் 4 போட்டியிலும் வென்றிருந்ததால் பைனலுக்கு செல்லும் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டது. மறுபுறம் பேட்டிங்கில் தட்டுத் தடுமாறி 180 ரன்களை கூடத் தொடாத இந்தியா பந்து வீச்சிலும் ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை எடுக்க தடுமாறி பெருமைக்கு போராடி தோல்வியடைந்தது.

- Advertisement -

இப்போட்டியில் வழக்கம் போல முக்கிய நேரங்களில் விராட் கோலி, ராகுல் போன்ற முக்கிய பேட்ஸ்மேன்களும் புவனேஸ்வர் குமார் போன்ற முக்கிய பந்து வீச்சாளர்களும் சிறப்பாக சொதப்பியது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய பங்காற்றியது. இதனால் வரலாற்றில் 7 ஆசிய கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாகவும் கடைசியாக இதே துபாயில் 2018இல் நடைபெற்ற 50 ஓவர் ஆசிய கோப்பையை வென்று நடப்பு சாம்பியனாக இந்த தொடரில் களமிறங்கிய இந்தியா பைனலுக்கு செல்வதற்கான வாய்ப்பு 90% மங்கிப் போய்விட்டது என்றே கூறலாம்.

IND

கால்குலேட்டர எடுங்க:
இருப்பினும் தங்களுடைய நாடு எப்படியாவது இந்த ஆசிய கோப்பையின் இறுதிப் போட்டிக்குச் சென்று கோப்பையை தக்க வைக்குமா என்ற ஆதங்கமும் ஏக்கமும் கொண்டுள்ள பெரும்பாலான இந்திய ரசிகர்களுக்காக ஐபிஎல் தொடரில் இது போல் முக்கிய அணிகள் தோல்வியடையும் போது பைனலுக்கு தகுதி பெறுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் கால்குலேட்டர் முடிவுகளை இங்கேயும் பயன்படுத்தி பார்ப்போம்:

- Advertisement -

1. செப்டம்பர் 11ஆம் தேதியன்று நடைபெறும் மாபெரும் இறுதிப் போட்டியில் இந்தியா விளையாடுவதற்கு முதலில் செப்டம்பர் 7 ஆம் தேதியான இன்று இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடைபெறும் சூப்பர் 4 போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை ஆப்கானிஸ்தான் தோற்கடிக்க வேண்டும்.

afg vs pak

2. அப்படி பாகிஸ்தானை தோற்கடிக்கும் பட்சத்தில் மனதை கல்லாக்கி கொண்டு ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தனது கடைசி சூப்பர் 4 போட்டியில் அந்த அணியை தோற்கடித்து இந்தியா பெரிய வெற்றியை பதிவு செய்ய வேண்டும்.

- Advertisement -

3. அதுபோக ஏற்கனவே 2 வெற்றிகளை பதிவு செய்துள்ள இலங்கை தன்னுடைய கடைசி சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தானை கண்டிப்பாக தோற்கடிக்க வேண்டும்.

India Rohit Sharma

4. இவை அனைத்தையும் சேர்த்து தற்போது -0.125 என்ற ரன் ரேட்டை கொண்டுள்ள இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பிரமாண்ட வெற்றியை பதிவு செய்து அதை நேர்மறையாக்கி ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளை விட அதிக ரன் ரேட்டை எடுக்க வேண்டும். இவையெல்லாம் நடந்தால் இறுதி போட்டிக்கு இந்தியா தாராளமாக தகுதி பெறும்.

இதையும் படிங்க : 2 நாளுக்கு முன்னாலேயே எல்லாம் தெரியும். சுரேஷ் ரெய்னாவின் ஓய்வு குறித்து பேசிய – காசி விஸ்வநாதன்

ஆனால் இவை அனைத்தும் நடை பெறுவதற்கு வாய்ப்புகள் மிகமிக குறைவு என்பதால் மேற்கண்ட மெடிக்கல் மிராக்கள் நிகழ்ந்தால் மட்டுமே பைனலுக்கு சென்று இந்தியா கோப்பையை தக்க வைக்கும். இல்லையேல் வீட்டுக்கு கிளம்ப வேண்டியதுதான்.

Advertisement