சிஎஸ்கே’வுடன் ஜடேஜாவுக்கு சண்டை ஏற்பட்டது உண்மை தான், அவர் தான் பேசி சமாதானம் பண்ணாரு – வெளியான செய்தி இதோ

Jadeja
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 16வது சீசன் வரும் மார்ச் 31 முதல் கோலாகலமாக தோன்றுகிறது. இந்த வருடத்தின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத்தை முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் வருகிறது. முன்னதாக 4 கோப்பைகளை வென்று கொடுத்து சென்னை 2வது வெற்றிகரமான அணியாக ஜொலிக்க காரணமாக திகழும் எம்எஸ் தோனி 40 வயதை கடந்து விட்டதால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு காலங்காலமாக வகித்து வந்த கேப்டன்ஷிப் பதவியை கடந்த வருடம் ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்து அவரது தலைமையில் அவருக்கு உறுதுணையாக சாதாரண வீரராக விளையாடினார்.

ஆனால் உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் செய்த அனுபவமில்லாத ரவீந்திர ஜடேஜா தலைமையில் ஆரம்பத்திலேயே 4 தொடர் தோல்விகளை சந்தித்த சென்னை பிளே ஆப் சுற்றும் வாய்ப்பை இழந்தது. அதை விட கேப்டன்ஷிப் அடுத்ததால் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் தடுமாறிய ஜடேஜா ஒரு கட்டத்தில் மீண்டும் அந்த பதவியை தோனியிடம் ஒப்படைத்து பெங்களூருக்கு எதிரான போட்டியில் விளையாடிய போது காயமடைந்து வெளியேறினார். இருப்பினும் ஃபார்மை இழந்து தோல்வியை சந்திக்க காரணமாக அமைந்ததால் சுரேஷ் ரெய்னாவைப் போலவே ரவீந்திர ஜடேஜாவையும் காயம் என்ற பெயரில் சென்னை நிர்வாகம் கழற்றி விட்டதாகவும் அவரை அடுத்த சீசனில் பார்க்க முடியாது என்றும் செய்திகள் வெளியாகின.

- Advertisement -

சண்டை உண்மை தான்:
ஆனால் அப்போது ஜடேஜாவுக்கும் தங்களுக்கும் எந்த சண்டையும் இல்லை என்றும் உண்மையாகவே அவர் காயத்தால் தான் வெளியேறினார் என்றும் சென்னை நிர்வாக இயக்குனர் காசி விஸ்வநாதன் தெரிவித்தார். ஆனாலும் அடுத்த சில மாதங்களிலேயே சென்னை அணியுடன் விளையாடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரவீந்திர ஜடேஜா நீக்கியது அவருக்கும் அந்த அணிக்கும் தோனிக்கும் இடையே சண்டை என்ற வதந்திகளை உறுதியாக்கியது. அதனால் 2023 சீசனில் சென்னைக்காக ரவீந்திர ஜடேஜா விளையாட மாட்டார் என்று செய்திகள் வெளியானது அந்த அணி ரசிகர்களை கவலையடைய வைத்தது.

இருப்பினும் அவை அனைத்தையும் பொய்யாக்கும் வகையில் கடந்த சில மாதங்களாக சென்னை அணியுடன் தொடர்பில் ஈடுபட்ட ஜடேஜா தற்போது அந்த அணிக்காக விளையாடவும் தயாராகி வருகிறார். இந்நிலையில் தாம் கேட்காமலேயே கேப்டன்ஷிப் பதவியை கொடுத்து பின்னர் தோல்வியால் பாதியிலேயே பறித்த சென்னை அணி நிர்வாகம் மற்றும் தோனி மீது ரவீந்திர ஜடேஜா அதிருப்தியடைந்ததாக பிரபல க்ரிக்பஸ் இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது. அதனால் ஏற்பட்ட மனக்கசப்பில் சென்னை அணியிலிருந்து வெளியேறுவதற்கு ரவீந்திர ஜடேஜா முடிவெடுத்தது உண்மை தான் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

ஆனால் ஒரு கட்டத்தில் தோனி மற்றும் சிஎஸ்கே நிர்வாக இயக்குனர் காசி விஸ்வநாதன் ஆகிய இருவரும் நேரடியாக ரவீந்திர ஜடேஜாவிடம் நீண்ட பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அதில் அதுவரை ஏற்பட்ட குழப்பங்கள் மற்றும் தவறான புரிதல்கள் தெளிவுபடுத்தப்பட்டதாகவும் க்ரிக்பஸ் இணையம் தெரிவிக்கிறது. குறிப்பாக பொதுவாகவே அற்புதமான ஆல் ரவுண்டராக செயல்படும் ரவீந்திர ஜடேஜா 2022 சீசனில் வெறும் 116 ரன்களையும் 5 விக்கெட்களையும் எடுத்து சுமாராக செயல்படுவதற்கு கேப்டன்ஷிப் அழுத்தமே காரணம் என்பதை தோனி அவருக்கு புரிய வைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதை ஏற்றுக்கொண்ட ரவீந்திர ஜடேஜா சர்வதேச கிரிக்கெட்டில் இந்தளவுக்கு வளர்வதற்கு ஆரம்பகாலம் முதலே அதிகப்படியான வாய்ப்பும் ஆதரவும் கொடுத்த தோனி தம்மிடம் நேரடியாக பேசியதால் மேற்கொண்டு எதையும் மறுக்க முடியாமல் நிதர்சனத்தை புரிந்து கொண்டு 2023 சீசனில் விளையாடுவதற்கு சம்மதம் தெரிவித்ததாகவும் அந்த செய்தி கூறுகிறது.

இதையும் படிங்க:சச்சின் டெண்டுல்கரின் அந்த சாதனையை விராட் கோலி முறியடிப்பது கடினம் – ரவி சாஸ்திரி ஓபன்டாக்

அத்துடன் வரும் சீசன்களில் ரவீந்திர ஜடேஜா எதிர்பார்க்கும் வாய்ப்புகளையும் சுதந்திரத்தையும் கொடுப்பதாக தோனி மற்றும் சென்னை அணி நிர்வாகம் உறுதி கொடுத்ததாகவும் தெரிய வந்துள்ளது. அதனாலேயே பழையவற்றை கடந்து இந்த சீசனில் சென்னை அணிக்காக மீண்டும் விளையாடுவதற்கு ரவீந்திர ஜடேஜா சம்மதம் தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement