பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் 2017 முதல் அந்த அணிக்காக சர்வதேச அரங்கில் விளையாடுகிறார். அதில் 2019 வாக்கில் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவரை விராட் கோலியை விட சிறந்த பேட்ஸ்மேன் என்று பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் கொண்டாடினர். ஆனால் நாளடைவில் தடுமாற்றமாக விளையாடிய அவர் தோல்விகளுக்கு காரணமாக அமைந்தார்.
2023 ஆசியக் கோப்பை, 2023 உலகக் கோப்பை 2024 டி20 உலகக் கோப்பை தொடர்களில் அவரது தலைமையில் பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் பரிதாபமாக தோற்றது. அது போக ஜிம்பாப்வே, அமெரிக்கா போன்ற கத்துக்குட்டிகளிடமும் பாகிஸ்தான் தோற்றது. அதனால் கேப்டன்ஷிப் பொறுப்பை ராஜினாமா செய்த அவர் அழுத்தம் இல்லாமல் சுதந்திரமாக விளையாடி வருகிறார்.
பாபர் அசாம் தடுமாற்றம்:
அப்படி இருந்தும் தடுமாறும் அவர் நேற்று முடிந்த முத்தரப்பு தொடரில் கூட சுமாராக விளையாடி பாகிஸ்தானின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தார். இந்நிலையில் பாபர் அசாமுக்கு 2021 பிஎஸ்எல் தொடரின் போது கராச்சி அணியின் பயிற்சியாளராக பயிற்சிகளைக் கொடுத்ததாக தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஹர்செல் கிப்ஸ் தெரிவித்துள்ளார். ஆனால் ஆங்கிலம் தெரியாததால் அதை அவரால் நன்றாக புரிந்து கொள்ள முடியவில்லை என்று கிப்ஸ் தெரிவித்துள்ளார்.
அதனாலேயே பாபர் அசாம் இன்னும் முன்னேறாமல் தடுமாற்றமாகவே விளையாடுவதாக வெளிப்படையாக கிப்ஸ் தெரிவித்துள்ளார். இது பற்றி ரசிகர் ஒருவரின் கேள்விக்கு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “பாபரிடம் மொழி ஒரு பிரச்சினையாக இருக்கிறது. அவருடைய ஆங்கிலம் நன்றாக இருக்காது என்பது உங்களுக்குத் தெரியும்”
லாங்குவேஜ் பிரச்சனை:
“எனவே அவருடைய ஆட்டத்தைப் பற்றி அவரிடம் எடுத்துச் செல்வது கடினமான ஒன்றாகும். நான் அவருடன் முதல் முறையாக பணிபுரிந்தேன். அதனால் எனக்கு இது எல்லாவற்றையும் விட ஒரு கவனிப்பாக இருந்தது. ஆனால் அதன் பின் நான் பார்த்தது என்னவென்றால் அவர் தனது அணுகுமுறையை மாற்றவில்லை”
இதையும் படிங்க: ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி வரலாறு: தவான், கெயில்.. அதிக ரன்கள் அடித்த டாப் 6 பேட்ஸ்மேன்களின் பட்டியல்
“இன்னும் அதே டெம்போ மற்றும் அதே ஷாட்களுடன் விளையாடுகிறார்” என பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது. அந்த வகையில் தன்னுடைய ஆட்டத்தை முன்னேற்றாமல் பாபர் அசாம் இன்னும் தடுமாற்றமாக விளையாடி வருகிறார் என்று சொல்லலாம். இதைத் தொடர்ந்து சொந்த மண்ணில் சாம்பியன்ஸ் டிராபியில் அவர் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.



