ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி வரலாறு: தவான், கெயில்.. அதிக ரன்கள் அடித்த டாப் 6 பேட்ஸ்மேன்களின் பட்டியல்

shikhar dhawan
- Advertisement -

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி வரும் பிப்ரவரி 19ஆம் தேதி பாகிஸ்தான் மண்ணில் நடைபெற உள்ளது. மினி உலகக் கோப்பை என கிரிக்கெட் ரசிகர்களால் வர்ணிக்கப்படும் இந்தத் தொடர் 1998 முதல் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் ஒவ்வொரு போட்டியும் நாக் அவுட் போல அழுத்தம் மிகுந்ததாக இருக்கும் என்பதால் ரன்கள் குவிப்பது மிகவும் சவாலானதாக கருதப்படுகிறது.

அதையும் தாண்டி அதிக ரன்கள் குவித்த டாப் வீரர்களின் பட்டியலை பார்ப்போம்:
1. கிறிஸ் கெயில்: வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி நாயகனான இவர் 2002 – 2013 வரையிலான சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் 17 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 791 ரன்களை 52.73 என்ற நல்ல சராசரியில் குவித்துள்ள இவர் சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன்கள் குவித்த வீரராக சாதனை படைத்து 3 சதம், 1 அரை சதத்தையும் பதிவு செய்துள்ளார்.

- Advertisement -

டாப் பேட்ஸ்மேன்கள்:

2. மகிளா ஜெயவர்த்தனே: இலங்கை ஜாம்பவானான இவர் 2000 – 2013 காலகட்டங்களில் 21 போட்டிகளில் விளையாடி 742 ரன்களை 41.22 என்ற சராசரியில் குவித்து இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். சதம் எதுவும் அடிக்காத இவர் 5 அரை சதங்கள் அடித்துள்ளார்.
3. ஷிகர் தவான்: மிஸ்டர் ஐசிசி என்ற ரசிகர்களால் வர்ணிக்கப்படும் இவர் 2013, 2017 ஆகிய 2 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மட்டுமே விளையாடினார்.

அந்த 2இல் 10 போட்டிகளில் அதுவும் சவாலான இங்கிலாந்து 701 ரன்களை 77.88 என்ற அபாரமான சராசரியில் மண்ணில் குவித்துள்ள அவர் 3 சதங்கள் 3 அரை சதங்களையும் அடித்துள்ளார். அந்த 2 தொடர்களிலுமே அதிக ரன்கள் விளாசி தங்க பேட் விருதுகளை தட்டிச்சென்ற தவான் 2013 சாம்பியன் டிராபியை இந்தியா வெல்ல உதவினார்.

- Advertisement -

டாப் 6 பட்டியல்:

4. குமார் சங்கக்காரா: 2000 – 2013 வரையிலான காலகட்டங்களில் இலங்கைக்காக 21 போட்டிகளில் விளையாடிய இவர் 683 ரன்களை 37.94 என்ற சராசரியில் எடுத்து இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார்.
5. சௌரவ் கங்குலி: தாதா என்று இந்திய ரசிகர்களால் கொண்டாடப்படும் இவர் 1998 – 2009 வரையிலான காலகட்டங்களில் வெறும் 11 போட்டியிலேயே 3 சதங்கள் 3 அரை சதங்கள் உட்பட 665 ரன்களை 71.36 என்ற அபார சராசரியில் குவித்து இப்பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

இதையும் படிங்க: ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 1998 – 2017: இதுவரை கோப்பையை வென்ற சாம்பியன் அணிகளின் பட்டியல்.. லிஸ்ட் இதோ

2000 சாம்பியன்ஸ் கோப்பையை இவர் கேப்டனாக இந்தியாவுக்கு வென்றதை மறக்க முடியாது.
6. ஜேக் காலிஸ்: தென் ஆப்பிரிக்காவின் ஆல் டைம் ஜாம்பவான் இவர் 1998 – 2009 வரை 17 போட்டிகளில் 653 ரன்களை 46.64 என்ற சராசையில் குவித்து இந்தப் பட்டியலில் ஆறாவது இடத்தை பிடித்துள்ளார்.

Advertisement