ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 1998 – 2017: இதுவரை கோப்பையை வென்ற சாம்பியன் அணிகளின் பட்டியல்.. லிஸ்ட் இதோ

Champions Trophy winners
- Advertisement -

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி பாகிஸ்தானில் துவங்குகிறது. மினி உலகக் கோப்பை என்று ரசிகர்களால் வர்ணிக்கப்படும் இந்தத் தொடரில் ஒவ்வொரு போட்டியும் நாக் அவுட் போல சவால் மிகுந்ததாக இருக்கும். அதனாலேயே நாக் அவுட் கோப்பை என்ற பெயரில் 1998இல் துவங்கப்பட்ட இந்தத் தொடருக்கு ரசிகர்களிடம் இப்போதும் தனித்துவமான மவுசு இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் வரலாற்றில் சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற அணிகளின் விவரங்களைப் பார்ப்போம்.
1. தென் ஆப்பிரிக்கா (1998): ஐசிசி நாக் அவுட் கோப்பை என்ற பெயரில் இந்தத் தொடர் முதல் முறையாக வங்கதேசத்தில் நடைபெற்றது. மொத்தம் 9 அணிகள் விளையாடிய அந்தத் தொடரில் பிரைன் லாரா தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியை க்ரோன்ஜி தலைமையிலான தென்னாப்பிரிக்கா தோற்கடித்து கோப்பையை வென்று சாதனை படைத்தது.

- Advertisement -

சாம்பியன் அணிகள்:

2. நியூசிலாந்து (2000): நைரோபியில் நடைபெற்ற இத்தொடரில் இந்தியாவை பைனலில் தோற்கடித்து நியூசிலாந்து முதல் முறையாக கோப்பையை வென்றது.
3. இந்தியா, இலங்கை (2002): சாம்பியன்ஸ் டிராபி என்ற பெயரில் மாற்றப்பட்ட இந்தத் தொடர் இலங்கையில் நடைபெற்றது. அதில் வலுவான செமி ஃபைனல்களில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்த இலங்கை அணியை தென்னாப்பிரிக்காவை தோற்கடித்த இந்தியா அதன் சொந்த மண்ணில் எதிர்கொண்டது. இருப்பினும் கொழும்புவில் நடைபெற்ற இறுதிப்போட்டி மழையால் 2 நாட்களும் பாதிக்கப்பட்டதால் கங்குலி தலைமையிலான இந்தியா – ஜெயசூர்யா தலைமையிலான இலங்கை ஆகிய இரு அணிகளுக்கும் கோப்பை பகிர்ந்து கொடுக்கப்பட்டது.
3. வெஸ்ட் இண்டீஸ் (2004): இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற இந்தத் தொடரில் பிரைன் லாரா தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அபாரமாக விளையாடி ஃபைனலுக்குச் சென்றது. இறுதியில் இங்கிலாந்தை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடித்த வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன் பட்டத்தை வென்றது. லாரா கேப்டனாக வென்ற அதிகம் பேசப்படாத ஒரு கோப்பை இதுவாகும்.
4. ஆஸ்திரேலியா (2006): இந்தியாவில் முதல் முறையாக நடைபெற்ற அத்தொடரில் லாரா தலைமையில் மீண்டும் அபாரமாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் ஃபைனலுக்குச் சென்றது.

இந்தியா – ஆஸி 2 முறை:

ஆனால் அந்த காலகட்டத்தில் ரிக்கி பாண்டிங் தலைமையில் முரட்டுத்தனமான ஃபார்மில் இருந்த ஆஸ்திரேலியா மும்பையில் நடைபெற்ற ஃபைனலில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
5. ஆஸ்திரேலியா (2009): தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற இந்தத் தொடரில் ஃபைனலில் நியூசிலாந்தை தோற்கடித்த பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலியா மீண்டும் கோப்பையை வென்றது.

- Advertisement -

இதையும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் டாஸ் வென்றால் இந்திய அணி இதைத்தான் செய்யனும் – ஆகாஷ் சோப்ரா கருத்து

6. இந்தியா (2013): எம்எஸ் தோனி தலைமையில் இளம் வீரர்களுடன் அசத்திய இந்தியா ஃபைனலில் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து தங்களது 2வது கோப்பையை வென்றது. மழையால் டி20 போட்டியாக நடைபெற்ற அந்தப் ஃபைனலில் கோப்பையை வென்ற இந்தியா 2 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்ற அணி என்ற ஆஸ்திரேலியாவின் சாதனையை சமன் செய்தது.
7. பாகிஸ்தான் (2017): கடைசியாக இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில் விராட் கோலி தலைமையில் அசத்திய இந்தியாவை ஃபைனலில் தோற்கடித்த பாகிஸ்தான் தங்களது முதல் கோப்பையை வென்றது.

Advertisement