வீடியோ : இப்படி கூடவா அவுட் ஆவீங்க. வித்தியாசமான முறையில் ஆட்டமிழந்து நடையை கட்டிய – நியூசி வீரர்

Jack-Leach
- Advertisement -

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது இங்கிலாந்து நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரண்டு போட்டிகளிலும் அசத்தலான வெற்றியை பெற்ற இங்கிலாந்து அணியானது இந்த தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

அதன்படி நேற்று லீட்ஸ் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் நியூசிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்சில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 225 ரன்களை குவித்துள்ளது. அதனை தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

- Advertisement -

முதல் நாள் ஆட்டத்தில் டாம் லாதம் ரன் எதுவும் எடுக்காமலும், வில் யங் 20 ரன்களிலும், வில்லியம்சன் 31 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் டேவான் கான்வே 26 ரன்களிலும், ஹென்றி நிக்கோலஸ் 19 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்கள். பின்னர் டேரல் மிட்சல் மற்றும் பிளன்டால் ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக தற்போது நல்ல பாட்னர்ஷிப் அமைத்து நியூசிலாந்து அணி வீரர்கள் விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து வீரர் ஹென்ரி நிகோல்ஸ் ஆட்டமிழந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிகளவு பகிரப்பட்டு வருகிறது. ஏனெனில் வித்தியாசமான முறையில் ஆட்டமிழந்த அவரது இந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகியுள்ளது.

- Advertisement -

அதன்படி ஜாக் லீச் பந்து வீச்சினை எதிர்த்து அற்புதமான ஒரு ஸ்ட்ரைட் ட்ரைவ் ஷாட்டை ஹென்றி நிக்கோல்ஸ் அடித்தார். ஆனால் அது எதிர்புறத்தில் இருந்த பேட்ஸ்மென் உடம்பினை நோக்கிச் சென்றதால் தற்காப்பிற்காக அந்த பந்தினை டேரல் மிட்சல் தடுத்தார்.

இதையும் படிங்க : TNPL 2022 : பேட்டிங் பவுலிங் என ஒற்றை ஆளாய் அசத்திய மும்பை இந்தியன்ஸ் வீரர் – இதை கவனிசீங்களா?

ஆனால் எதிர்பாரா விதமாக டேரல் மிட்சல் பேட்டில் பட்ட அந்த பந்து நேராக மிட் ஆஃபில் இருந்த பீல்டரின் கைகளுக்கு சென்றது. பின்னர் மீண்டும் ஒருமுறை களத்தில் இருந்த அம்பயர் அதனை சரிபார்த்து விட்டு அவருக்கு அவுட் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement