IND vs RSA : அதெப்டியா உங்களுக்கு மட்டும் காயம் அதிர்ஷ்டமா மாறுது – தெ.ஆ வீரரால் இந்திய ரசிகர்கள் ஏக்கம்

Henrich Klassen
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்கா பங்கேற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் அனல் பறக்கும் தொடக்கத்தை பெற்றுள்ளது. ஏனெனில் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வெடுக்கும் நிலையை பயன்படுத்தும் அந்த அணி கேப்டன்ஷிப் அனுபவமில்லாத ரிஷப் பண்ட் தலைமையிலான இந்தியாவை ஜூன் 9இல் நடைபெற்ற முதல் போட்டியில் 212 என்ற மிகப்பெரிய இலக்கை வெற்றிகரமாக சேஸிங் செய்து வரலாற்று தோல்வியை பரிசளித்தது. அதனால் 12 வெற்றிகளுடன் உலக சாதனை படைத்து வெற்றி நடை போட்டு வந்த இந்தியாவுக்கு சொந்த மண்ணில் தலைகுனிவை ஏற்படுத்திய அந்த அணி ஜூன் 12-ஆம் தேதியான நேற்று ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் நடைபெற்ற 2-வது போட்டியிலும் படுதோல்வியை பரிசளித்தது.

DInesh Karthik

- Advertisement -

ஆம் நேற்று இரவு 7 மணிக்கு நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீசுகிறோம் என தீர்மானித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 20 ஓவர்களில் சுமாராக செயல்பட்டு 148/6 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடக்க வீரர் ருதுராஜ் 1 (4) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினாலும் மற்றொரு தொடக்க வீரர் இஷான் கிசான் 2 பவுண்டரி 3 சிக்சருடன் 34 (21) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் அப்போது வந்த கேப்டன் ரிஷப் பண்ட் 5 (7) ஹர்திக் பாண்டியா 9 (12) என முக்கிய வீரர்கள் பொறுப்பின்றி அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர்.

திணறிய தென்ஆப்பிரிக்கா:
அந்த நிலைமையில் மறுபுறம் போராடிய ஸ்ரேயாஸ் அய்யர் 40 (35) ரன்களில் அவுட்டாகி செல்ல அடுத்து வந்த அக்சர் படேல் 10 (11) ரன்களில் அவுட்டாகி நடையை கட்டினார். அதனால் 130 ரன்களை கூட தாண்டாது என எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவுக்கு நல்லவேளையாக கடைசியில் ஹர்ஷல் படேல் 12* (9) ரன்களும் தமிழகத்தின் நட்சத்திரம் தினேஷ் கார்த்திக் 2 பவுண்டரி 2 சிக்சருடன் 30* (21) ரன்களும் எடுத்து ஓரளவு காப்பாற்றினார். தென் ஆப்பிரிக்க சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக அன்றிச் நோர்ட்ஜெ 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

Klassen 1

அதை தொடர்ந்து 149 என்ற சுலபமான இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்காவை இந்திய சீனியர் நட்சத்திரம் புவனேஸ்வர் குமார் ஹென்றிக்ஸ் 4 (3) பிரிட்டோரியஸ் 4 (5) வேன் டெர் டுஷன் 1 (7) என பவர்பிளே ஓவர்களில் அனலாக பந்துவீசி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை காலி செய்தார். அதனால் 29/3 என தென் ஆப்பிரிக்கா திணறியதால் இம்முறை இந்தியாவின் வெற்றி உறுதி என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது களமிறங்கிய ஹென்றிச் க்ளாஸென் மற்றொரு தொடக்க வீரர் கேப்டன் தெம்பா பவுமாவுடன் இணைந்து நிதானமாகவும் அதிரடியாகவும் ரன்களை சேர்த்தார்.

- Advertisement -

மிரட்டியா க்ளாஸென்:
4-வது விக்கெட்டுக்கு 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்றிய இந்த ஜோடியில் கேப்டன் பவுமா 35 (30) ரன்களில் அவுட்டானார். ஆனாலும் மறுபுறம் அட்டகாசமாக பேட்டிங் செய்த க்ளாஸென் மிடில் ஓவர்களில் ரன் ரேட்டை எகிறவிடாமல் இந்திய பவுலர்களை சரவெடியாக எதிர்கொண்டு 7 பவுண்டரி 5 சிக்சருடன் 81 (46) ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்தபின் அவுட்டானார். இறுதியில் டேவிட் மில்லர் அதிரடியாக 20* (15) ரன்கள் எடுத்து பினிஷிங் கொடுத்ததால் 18.2 ஓவரிலேயே 149/6 ரன்களை எடுத்த தென்னாப்பிரிக்கா 4 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி பெற்றது. அதனால் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2 – 0* (5) என ஆரம்பத்திலேயே வலுவான முன்னிலை பெற்றுள்ள தென்னாப்பிரிக்காவுக்கு கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

Klassen

மறுபுறம் முதல் போட்டியில் பந்து வீச்சில் மொத்தமாக சொதப்பிய இந்தியா இந்த போட்டியில் பேட்டிங் பவுலிங் என இரண்டிலுமே முக்கிய தருணத்தில் சுமாராக செயல்பட்டு சொந்த மண்ணில் மீண்டும் ஒரு தோல்வியை சந்தித்து தலை குனிந்துள்ளது. தற்போதைய நிலைமையில் அடுத்த போட்டியில் வென்றால் மட்டுமே இந்த கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பை தக்க வைக்கமுடியும் என்ற பரிதாபமான நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.

அதிர்ஷ்ட காயம்:
இப்போட்டியில் 81 ரன்களைக் குவித்து தென் ஆப்பிரிக்காவின் வெற்றியை எளிதாக்கிய க்ளாஸென் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். முன்னதாக இந்த தொடரின் முதல் போட்டியில் களமிறங்கிய விக்கெட் கீப்பர் குயின்டன் டி காக் நேற்றைய 2-வது போட்டியில் காயமடைந்ததால் வாய்ப்பு பெற்ற இவர் அந்த வாய்ப்பை பொன்னாக மாற்றி இந்தியாவுக்கு தோல்வியை பரிசளித்தார்.

Klassen-2

ஆனால் முதலில் இந்த தொடருக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்ட கேஎல் ராகுல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய முக்கிய வீரர்கள் துரதிர்ஷ்டவசமாக தொடர் துவங்க ஒருநாள் முன்பாக காயத்தால் மொத்தமாக வெளியேறியது இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டது. ஆனால் அதே காயத்தால் வந்த வீரர் தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ஷ்டமாக மாறி வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளார். இதனால் உங்களுக்கு மட்டும் எப்படியா காயம் கூட அதிர்ஷ்டமாக மாறுகிறது என்று இந்திய ரசிகர்கள் ஏக்கத்துடன் தென் ஆப்பிரிக்காவை பார்க்கிறார்கள்.

Advertisement