ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 25ஆம் தேதி தலைநகர் டெல்லியில் 68வது போட்டி நடைபெற்றது. இரவு நடைபெற்ற அந்தப் போட்டியில் கொல்கத்தாவை 110 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் தோற்கடித்தது. அப்போட்டியில் முதலில் விளையாடிய ஹைதராபாத் 279 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக ஹென்றிச் க்ளாஸென் 105*, டிராவிஸ் ஹெட் 76 ரன்கள் எடுத்தனர்.
அடுத்து விளையாடிய கொல்கத்தா அணியை சிறப்பாக பவுலிங் செய்த ஹைதராபாத் 18.4 ஓவரில் 168 ரன்களுக்கு சுருட்டி அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக மனிஷ் பாண்டே 37, ஹர்ஷித் ராணா 34, சுனில் நரைன் 31 ரன்கள் எடுத்தனர். ஹைதராபாத் அணிக்கு ஜெய்தேவ் உனட்கட், எஷன் மலிங்கா, ஹர்ஷ் துபே தலா 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.
ஆட்டநாயகன் க்ளாஸென்:
இதனால் 14 போட்டிகளில் 6வது ஆறுதல் வெற்றியைப் பெற்ற ஹைதராபாத் இத்தொடரை வெற்றிகரமாக நிறைவு செய்தது. இந்த வெற்றிக்கு 37 பந்துகளில் ஐபிஎல் தொடரில் 2வது வேகமான அரை சதத்தை அடித்த வெளிநாட்டு வீரராக சாதனை படைத்து முக்கிய பங்காற்றிய ஹென்றிச் க்ளாஸென் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் தமக்கு மிகப்பெரிய சம்பளத்தை பணமாக கொடுக்கும் ஹைதராபாத் உரிமையாளருக்காக முடிந்தளவுக்கு அதிரடியாக விளையாடப் பயிற்சிகள் எடுத்துள்ளதாக க்ளாஸென் கூறியுள்ளார்.
மேலும் ஐபிஎல் தொடரின் இடையே மாலத்தீவுகளுக்கு சென்று ஹைதராபாத் வீரர்கள் புத்துணர்ச்சி பெற உரிமையாளர் ஏற்பாடு செய்ததாகவும் க்ளாஸென் நன்றி தெரிவித்துள்ளார். அதுவே கடந்த 3 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற உதவியதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஏற்கனவே சொன்னது போல அணி உரிமையாளர் நிறைய பணத்தை முதலீடு செய்துள்ளார்கள்”
க்ளாஸென் நன்றி:
“அவர்கள் 12 – 13 வருடங்களாக இங்கே இருக்கிறார்கள். கடந்த 3 போட்டியில் நாங்கள் சிறப்பான கிரிக்கெட்டை விளையாடினோம். இடையே எங்களுடைய அணி உரிமையாளர் அற்புதமான விடுமுறை கொடுத்தார்கள் அதற்காக அவர்களுக்கு நன்றி. இது போன்ற பிட்ச்சில் என்னுடைய சாதாரணமான திட்டம் என்னவெனில் நேரான பௌண்டரிகள் சிறியதாக இருக்கும். மற்ற பவுண்டரிகள் 50 – 60 மீட்டர் தொலைவில் இருக்கும்”
இதையும் படிங்க: நாங்க பைனலுக்கு வரவேண்டிய டீம்.. ஆனா இப்படி நடந்ததில் வருத்தம் தான் – பேட் கம்மின்ஸ் பேட்டி
“எனவே நான் ஃபீல்டர்களை எடுத்துக் கொள்ளாமல் அதிகம் நேராக அடிக்க முயற்சி செய்கிறேன். லென்த்களை சரியாக எடுத்து அடிப்பதற்காக நான் நிறைய வேலை செய்துள்ளேன். வலைப்பயிற்சியில் நிறைய நேரங்களை செலவிட்டுள்ளேன். இன்று நான் விரும்பிய இடத்தில் பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. பொதுவாக 5, 6, 7வது ஓவர்கள் முடிந்த பின் பேட்டிங் செய்ய வருவேன். அங்கே சில நேரங்களில் அதிரடி வேலை செய்யும், சில நேரங்களில் செய்வதில்லை. எப்படியிருந்தாலும் நான் நன்றாக விளையாடாமல் இருப்பதற்காக உரிமையாளர் பணம் கொடுக்கவில்லை” என்று கூறினார்.



