நாங்க பைனலுக்கு வரவேண்டிய டீம்.. ஆனா இப்படி நடந்ததில் வருத்தம் தான் – பேட் கம்மின்ஸ் பேட்டி

Pat Cummins
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 68-வது லீக் போட்டியானது டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், அஜின்க்யா ரகானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

பைனலுக்கு வரவேண்டிய டீம் நாங்க : பேட் கம்மின்ஸ் வருத்தம்

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 278 ரன்கள் குவித்தது. சன்ரைசர்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக ஹென்றிச் கிளாசன் 105 ரன்களையும், டிராவிஸ் ஹெட் 76 ரன்களையும் குவித்தனர். பின்னர் 279 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணியானது :

- Advertisement -

சன்ரைசர்ஸ் அணியின் சிறப்பான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 18.4 ஓவர்களில் 168 ரன்களை மட்டுமே குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் காரணமாக சன்ரைசர்ஸ் அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கொல்கத்தா அணி சார்பாக அதிகபட்சமாக மணிஷ் பாண்டே 37 ரன்களையும், ஹர்ஷித் ராணா 34 ரன்களையும் குவித்தனர்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறுகையில் : இந்த போட்டியை வெற்றியுடன் முடித்ததில் மகிழ்ச்சி. கடந்த சில போட்டிகளாகவே நாங்கள் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறோம். அதிலும் குறிப்பாக எங்களது பேட்டிங் யூனிட்டை பார்த்தால் நிச்சயம் எதிரணிகளுக்கு பயம் வரும்.

- Advertisement -

அந்த அளவிற்கு எங்களது வீரர்கள் சிறப்பாக விளையாடியுள்ளனர். நாங்கள் இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு வரவேண்டிய ஒரு அணி. ஆனால் இந்த ஆண்டு எங்களால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் போனது உண்மையிலேயே வருத்தம் தான். நாங்கள் இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்தே இதுபோன்று பெரிய ரன் குவிப்பை வழங்கவே முயற்சித்தோம்.

இதையும் படிங்க : புறாக்கள் கழுகு ஆகாது.. 2026இல் சிஎஸ்கே அணிக்குள் வரும் ரெய்னா? நேரலையில் அவரே சொன்ன தகவல்

ஆனால் ஒரு சில மைதானங்களில் எங்களால் பெரிய ரன்களை அடிக்க முடியாமல் போனது. இந்த தொடரில் தற்போது நாங்கள் சரியான அணியை தேர்வு செய்துள்ளதாக நினைக்கிறோம். நிச்சயம் அடுத்த சீசனில் மிக வலுவாக திரும்புவோம் என பேட் கம்மின்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement