இந்த ஆண்டு டெல்லி கேபிட்டல்ஸ் அணி பிளே ஆப் வாய்ப்பை தவறவிட இதுதான் காரணம் – கோச் ஹேமங் பதானி பேட்டி

Hemang Badani
- Advertisement -

அக்சர் பட்டேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று வரும் 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் நான்கு போட்டிகளில் அசத்தலான வெற்றியை பெற்று இந்த தொடரை பிரமாண்டமாக ஆரம்பித்தது. ஆனால் அதன்பிறகு நடைபெற்ற பத்து போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே பெற்றதால் தற்போது பிளே ஆப் வாய்ப்பை இழந்துள்ளது.

பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாததற்கு இதுவே காரணம் : அக்சர் படேல்

ஒட்டுமொத்தமாக இந்த தொடரில் இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ள அவர்கள் 6 வெற்றி மற்றும் 6 தோல்வி என 13 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளனர். மேலும் எஞ்சியுள்ள கடைசி ஆட்டத்தில் அவர்கள் வெற்றி பெற்றாலும் பிளே ஆப் சுற்றுக்கு வாய்ப்பு இல்லை என்பதனால் இந்த ஆண்டு லீக் சுற்றோடு இந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த 2025 தொடரில் அற்புதமாக தொடரை துவங்கிய டெல்லி அணியானது பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாததற்கு என்ன காரணம்? என்பது குறித்து சில கருத்துக்களை அந்த அணியின் தலைமை பயிற்சியாளரான ஹேமங் பதானி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

இந்த ஆண்டு டெல்லி கேபிட்டல்ஸ் அணி இந்த தொடரை நன்றாக துவங்கிய போதும் துவக்க வீரர்கள் சரியாக விளையாடாததால் அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளதாக நினைக்கிறேன். துவக்க வீரர்களுக்கான ஜோடி நிலையாக இல்லாததால் இடையிடையே சில மாற்றங்களை செய்தோம்.

- Advertisement -

அந்த மாற்றங்களால் எங்களால் இறுதிவரை துவக்க வீரர்களுக்கான ஜோடியை கண்டறிய முடியவில்லை. ஆரம்பத்தில் ஜேக் பிரேசர் மெக்கர்க்கை துவக்க வீரராக களமிறக்கினோம். ஆனால் அவர் சரியாக விளையாடவில்லை. அதன் பின்னர் அபிஷேக் போரேல், டூப்ளிசிஸ், கருண் நாயர், கே.எல் ராகுல் என பல்வேறு மாற்றங்கள் நடைபெற்றன.

இதையும் படிங்க : டேவிட் வார்னரை சமன் செய்து விராட் கோலியின் சாதனையை நெருங்கிய கே.எல் ராகுல் – விவரம் இதோ

இப்படி எங்களுக்கு நல்ல துவக்கத்தை கொடுக்கும் வீரர்கள் எங்களிடம் இல்லை என்பதனாலே இந்த தொடரில் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளோம். ஆனால் நிச்சயம் அடுத்த ஆண்டு பலமாக திரும்பவும் என ஹேமங் பதானி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement