இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 63-வது லீக் போட்டியானது நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், டூப்ளிசிஸ் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற டெல்லி அணியின் கேப்டன் டூப்ளிசிஸ் முதலில் தங்களது அணி பந்துவீசும் என்று அறிவித்தார்.
டேவிட் வார்னரின் சாதனை சமன் செய்த கே.ராகுல் :
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் குவித்து அசத்தியது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 73 ரன்களையும், திலக் வர்மா 27 ரன்களையும் குவித்து அசத்தினார்.
பின்னர் 181 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணியானது மும்பை இந்தியன்ஸ் அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 18.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 121 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக மும்பை அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது டெல்லி அணி சார்பாக அதிகபட்சமாக சமீர் ரிஸ்வி 39 ரன்களையும், விப்ராஜ் நிகம் 20 ரன்களையும் குவித்து அசத்தினர். இந்நிலையில் இந்த போட்டியின் போது டெல்லி அணியின் துவக்க வீரராக விளையாடிய கே.எல் ராகுல் 6 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 11 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து இருந்தாலும் ஐபிஎல் தொடரில் டேவிட் வார்னரின் ஒரு முக்கிய சாதனையை சமன் செய்து விராட் கோலிக்கு அடுத்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
அந்த வகையில் கே.எல் ராகுல் படைத்த சாதனை யாதனில் : நேற்றைய போட்டியில் அவர் அடித்த 11 ரன்கள் மூலம் இந்த தொடரில் அவர் தனது 500 ரன்களை பூர்த்தி செய்துள்ளார். இதன் மூலம் 7 ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் 500 ரன்களை குவித்த வீரராக டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்துள்ளார்.
இதையும் படிங்க : கவாஸ்கருக்கு பின் இந்த திறமையைக் கொண்ட சுதர்சனுக்கு.. இங்கிலாந்தில் ரோஹித் இடத்தை கொடுங்க.. சித்து பேட்டி
முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான டேவிட் வார்னரும் ஐபிஎல் தொடர்களில் ஏழு ஆண்டுகளில் 500 ரன்கள் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் விராத் கோலி 8 ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் 500 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



