பேட்ஸ்மேன்கள் அப்படி பார்ப்பதில் தனிசுகம் – பவுன்சர்கள் வீசிய ரசிகசியத்தை கூறும் சோயிப் அக்தர்

Akhtar
- Advertisement -

கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களுக்கு பவுண்டரியும் சிக்சர்களையும் அடிக்க பிடிக்கும் என்றால் ஒரு பந்து வீச்சாளர்களுக்கு அதுவும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிரணி பேட்ஸ்மேன்களை க்ளீன் போல்ட்டாக்குவதும் பவுன்சர் பந்துகளை வீசி பயமுறுத்துவது மிகவும் பிடிக்கும். அதிலும் பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தனது அசுர வேகப்பந்துகளால் பேட்ஸ்மேன்களை அச்சுறுத்த வேண்டும் என்று நினைப்பவர். பவுண்டரி எல்லையின் அருகில் இருந்து பயங்கரமாக ஓடி வரக்கூடிய அவர் முடிந்த அளவு அதிவேகமாக பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் வகையில் பந்து வீசுவார். அவரின் வேகத்திற்கு சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் போன்ற உலகத்தரமான பேட்ஸ்மேன்கள் கூட பலமுறை தடுமாறியுள்ளனர்.

Akhtar

- Advertisement -

அந்த அளவுக்கு தரமான இவர் கடந்த 2003 உலகக் கோப்பையின் போது 161.3 கி.மீ வேகத்திலான பந்தை வீசி சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமான பந்தை வீசிய பவுலராக உலக சாதனை படைத்துள்ளார். 20 வருடங்கள் நெருங்கியும் இதுவரை அந்த உலக சாதனை உடைக்கப் படாமல் இருக்கும் நிலையில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் போன்ற இந்திய பேட்ஸ்மேன்களை கண்டால் வேண்டுமென்றே கூடுதல் வேகத்தில் பந்து வீசி அவர்களை கதி கலங்க செய்ய இவர் கொள்ளை பிரியப்படுவார்.

பவுன்சர், பீமர்:
ஒருவேளை அவர்கள் அதற்கு ஈடு கொடுத்து சமாளிப்பதுடன் பவுண்டரி சிக்ஸர் போன்ற ரன்களை அடித்தால் அதற்கு சளைக்காமல் அடுத்த ஆயுதமான பவுன்சர் பந்துகளை பிரயோகிப்பார். அதுவும் தலைக்கு நேராக அதி வேகத்தில் பந்து வீசினால் யாருமே எதிர்கொள்ள முடியாமல் ஒன்று குனிந்து கொடுக்க வேண்டும். இல்லையேல் தாவி தவிர்க்க வேண்டும். அப்படி செய்யத் தவறினால் அதிரடியான வேகத்தில் அவர் வீசும் பந்துகள் ஹெல்மெட் போட்டிருந்தாலும் தலையை பதம் பார்த்து விடும்.

Akhtar 1

அதையும் தாண்டி பேட்ஸ்மேன்கள் பவுண்டரி அல்லது சிக்சர்கள் அடித்தால் அம்பயர்கள் நோ-பால் வழங்கினாலும் பரவாயில்லை என்று பேட்ஸ்மேன்கள் மேலும் அதிரடி காட்ட முடியாத அளவுக்கு பீமர் பந்துகள் அதாவது தரையில் பிட்ச் செய்யாமல் நேராக தலைக்கு அதிவேகமான பந்துகளை எரிந்து பயம் காட்டுவார். அந்த அளவுக்கு பந்துவீச்சில் மிரட்டலாக செயல்பட்ட சோயப் அக்தர் அளவுக்கு பிரெட் லீ, கிளென் மெக்ராத் ஆகிய ஜாம்பவான்களை தவிர காயமடைந்து விடுவோம் என்ற அச்சத்தில் சமீபகால பவுலர்கள் யாரும் அவ்வளவு வேகத்தில் பந்து வீசுவது கிடையாது.

- Advertisement -

குரங்குகளை போல்:
இந்நிலையில் பவுன்சர்களை வீசினால் பேட்ஸ்மேன்கள் குரங்குகளைப் போல தாவி தாவி தவிர்ப்பது தமக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் அதை தன்னுடைய காலங்களில் அதிகமாக வீசியதாக சோயப் அக்தர் தற்போது கலகலப்புடன் தெரிவித்துள்ளார். இதுபற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “பேட்ஸ்மேன்கள் குரங்குகளைப் போல தாவுவது பார்ப்பதற்கு எனக்கு மிகவும் பிடிக்கும். அதன் காரணமாகவே பவுன்சர்கள் அதிகமாக வீசுவேன். நான் பொய் பேச விரும்பவில்லை. நான் பெரும்பாலும் பேட்ஸ்மேன்களின் தலையை அதிவேகமான பந்துகளின் வாயிலாக அடிப்பதற்கு விரும்புவேன். ஏனெனில் ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு அது மிகவும் பிடித்தது” என்று வெளிப்படையாகக் கூறினார்.

Akhtar

அவர் எத்தனையோ பவுன்சர்கள் வீசியிருந்தாலும் கடந்த 2002ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் ஷேன் வாட்சனுக்கு எதிராக வீசிய ஒரு பவுன்சர் பந்து வாட்சனை தாண்டி விக்கெட் கீப்பர் தாண்டி பவுண்டரி செல்லும் அளவுக்கு மின்னல் வேகத்தில் வீசியதை மறக்கவே முடியாது. தனது வாழ்நாளில் அது போன்ற ஒரு வேகமான பந்தை பார்த்ததே இல்லை என்று ஷேன் வாட்சன் கூட சமீபத்தில் அது பற்றி நினைவு கூர்ந்து இருந்தார்.

- Advertisement -

அந்த அளவுக்கு மிரட்டலையும் வேகத்தையும் விரும்பும் சோயப் அக்தர் பேட்ஸ்மேன்களை வேகத்தால் மிரட்டினால் மட்டுமே மனதளவில் பயமுறுத்தி ரன்களை அடிப்பதை தடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். இல்லையேல் அவர்கள் நம்மைத் திருப்பி அடித்து விடுவார்கள் என்றும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : விராட் கோலிக்கு மரியாதை கொடுங்க, நிச்சயம் 110 சதங்கள் அடிப்பாரு – முன்னாள் பாக் வீரரின் ஆதரவு

இதுபற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “185+ இதயத்துடிப்பு வேகத்தில் பேட்ஸ்மேனுக்கு எதிராக அவர்களின் உடலில் வீக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு பந்து வீச வேண்டும். ஒரு பேட்ஸ்மேன் அதை கண்ணாடியில் பார்க்கும் போது என்னை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அதுதான் ஒரு வேகப்பந்து வீச்சாளர் உண்மையாக விரும்புவது” என்று தெரிவித்தார். வேகத்திற்கு பெயர்போன சோயப் அக்தர் பாகிஸ்தானுக்காக 224 போட்டிகளில் 444 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இடையிடையே வேகத்திற்கு ஈடான காயங்களை சந்தித்த அவர் காயமடையாமல் முழுமையாக விளையாடியிருந்தால் இன்னும் கூடுதலான விக்கெட்டுகளை எடுத்திருப்பார் என்றே கூறலாம்.

Advertisement