நல்லவேளை அவர் இந்திய அணியில் இல்லததால் ஈஸியா ஜெயிச்சுடுவோம் – வக்கார் யூனிஸ் மகிழ்ச்சியுடன் பேட்டி

Younis
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் 2007க்குப்பின் 2வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்புடன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பயிற்சி போட்டிகளில் விளையாடி தயாராகியுள்ளது. அவரது தலைமையில் கடந்த ஒரு வருடமாக பங்கேற்ற அத்தனை இருதரப்பு தொடர்களையும் வென்று தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக முன்னேறிய இந்தியாவுக்கு சமீபத்திய ஆசிய கோப்பை தோல்வியும் கடைசி நேரத்தில் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் வெளியேறியதும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் அவருக்கு பதில் தேர்வாகியுள்ள முகமது ஷமி பயிற்சி போட்டியில் அபாரமாக செயல்பட்டு வெற்றியை பெற்றுக் கொடுத்த நம்பிக்கையுடன் இத்தொடரில் கோப்பையை வெல்ல ஆயத்தமாகியுள்ள இந்தியா தனது முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

IND vs PAk Rahul Hardik Pandya

- Advertisement -

கடந்த 1992 முதல் தொடர்ச்சியாக அனைத்து உலக கோப்பைகளிலும் தோல்வியடையாமல் வீரநடை போட்ட இந்தியா கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் முதல் முறையாக தோற்று அவமானத்தைச் சந்தித்தது. அந்த நிலையில் சமீபத்திய ஆசிய கோப்பையில் லீக் சுற்றில் வென்றாலும் சூப்பர் 4 சுற்றில் மீண்டும் தோற்ற இந்தியா அதற்கு இம்முறை அக்டோபர் 23ஆம் தேதியன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் வென்று தக்க பதிலடி கொடுத்து பழி தீர்க்க போராட உள்ளது.

நல்லவேளை உம்ரான் இல்ல:
முன்னதாக இத்தொடரில் முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் வெளியேறிய போது வேகத்துக்கு கை கொடுக்க கூடிய ஆஸ்திரேலிய மைதானங்களில் தொடர்ச்சியாக 150 கி.மீ வேகத்தில் வீசக்கூடிய உம்ரான் மாலிக்கை தேர்வு செய்ய வேண்டுமென்று திலிப் வெங்சர்க்கார் போன்ற முன்னாள் வீரர்கள் கேட்டுக்கொண்டனர். ஆனால் ஐபிஎல் 2022 தொடரில் 22 விக்கெட்டுகளை அதிரடியான வேகத்தில் எடுத்த அவர் இந்தியாவுக்காக அறிமுகமாகி விளையாடிய 2 போட்டிகளில் நல்ல லைன், லென்த் போன்ற விவேகத்தை பின்பற்றாமல் வேகத்தை மட்டுமே நம்பிய ரன்களை வாரி வழங்கினார்.

Umran Malik IND vs IRE

அதனால் அதிரடியாக நீக்கப்பட்ட அவர் அயர்லாந்துக்கு எதிரான அறிமுக போட்டியிலேயே கடைசி ஓவரில் 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றுக் கொடுத்ததை போல் தொடர்ச்சியாக வாய்ப்பளித்தால் முன்னேறுவார் என்ற கருத்துக்கள் எழுந்தன. குறிப்பாக சூப்பர் காரை ஒர்க் ஷாப்’பிலேயே விட்டுவிட்டு ஆஸ்திரேலியா வந்துள்ளது தமக்கு ஆச்சரியமளிப்பதாக ஜாம்பவான் பிரெட் லீ அதிருப்தியை வெளிப்படுத்தினார். இந்நிலையில் தங்களுக்கு எதிரான உலககோப்பை போட்டிக்கான இந்திய அணியில் உம்ரான் மாலிக் இல்லாதது நிம்மதியை கொடுப்பதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் வக்கார் யூனிஸ் வெளிப்படையாக பேசியுள்ளார்.

- Advertisement -

ஆரம்ப காலங்களில் ஜாம்பவான்களும் தடுமாறுபவர்கள் என்ற நிலையில் உம்ரான் மாலிக் திறமையானவர் என்று பாராட்டும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “ஆரம்ப காலங்களில் ஜாம்பவான் பவுலர்களும் சுமாராக செயல்பட்டு கடலில் தூக்கி எறியப்படுவார்கள். இருப்பினும் அவர்கள் விரைவாக நீந்தக் கற்றுக் கொள்வார்கள். அந்த வகையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி விரைவில் நடைபெறும் நிலையில் அவர் (உம்ரான்) இல்லாதது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அவரிடம் உண்மையான திறமையுள்ளது என்பதை பற்றி சமீபத்திய ஆசிய கோப்பையிலும் நாம் விவாதித்தோம்”

Misbah-1

“ஆனால் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் செயல்பட்ட இந்திய வல்லுனர்களின் கனவு அணியில் கூட அவரது பெயர் இடம் பெறவில்லை. அதனால் எங்களைப்போல் இந்தியர்கள் சிந்திக்காததைப் பார்த்து நான் ஆச்சரியமடைந்தேன். ஏனெனில் எங்களைப் பொறுத்த வரை ஒருவரிடம் வேகம் இருந்தால் மற்ற அனைத்தும் தாமாகவே வந்து விடும். அந்த வகையில் மிஸ்பா தலைமையில் அறிமுகமான பவுலர்கள் தான் இன்று பாகிஸ்தான் பந்து வீச்சின் முதுகெலும்பாக இருப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள்” என்று கூறினார்.

அதாவது கற்றுக் கொடுத்தாலும் பெறமுடியாத அதிரடியான வேகத்தை கொண்டுள்ள உம்ரான் மாலிக் போன்ற ஒருவருக்கு லைன், லென்த் போன்ற விவேகங்களை விரைவாக கற்றுக்கொடுத்து வெற்றிகரமாக செயல்பட வைக்க முடியும் என்று தெரிவிக்கும் வக்கார் யூனிஸ் அதை இந்தியா செய்ய தவறியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் அவரைப்போன்ற பவுலர்கள் தங்களது அணியில் அறிமுகமான ஆரம்பத்தில் தடுமாறினாலும் தற்போது முதுகெலும்பாக மாறியுள்ளதாக தெரிவிக்கும் அவர் ஒரு வேகப்பந்து வீச்சாளரை உருவாக்குவதில் இந்தியர்கள் தவறான கண்ணோட்டத்தை கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Advertisement