கேப்டன்ஷிப் அழுத்தத்தால் ரோஹித் சர்மா திண்டாடுகிறார் – ஹபீஸை தொடர்ந்து மற்றொரு பாக் வீரர் விமர்சனம்

Rohith
- Advertisement -

வரலாற்றில் 15வது முறையாக நடைபெற்று வரும் ஆசிய கோப்பையில் ரோகித் சர்மா தலைமையில் விளையாடி வரும் நடப்பு சாம்பியன் இந்தியா தனது லீக் சுற்றில் பாகிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகளை தோற்கடித்து சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. கடந்த வருடம் இதே துபாயில் நடந்த உலகக்கோப்பையில் பாகிஸ்தானிடம் தோற்று லீக் சுற்றுடன் நடையை கட்டிய இந்தியா அதன் பின் முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா தலைமையில் பங்கேற்ற அத்தனை தொடர்களிலும் தோல்வியடையாமல் வெற்றி நடை போட்டு வருகிறது.

IND vs PAK Babar Azam Rohit Sharma

- Advertisement -

முன்னதாக நவீன கிரிக்கெட்டில் இந்தியாவின் மிகச் சிறந்த தொடக்க வீரராகக் கருதப்படும் ரோகித் சர்மா அதிரடி சரவெடியாக பேட்டிங் செய்து ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள், ஒரே உலக கோப்பையில் 5 சதங்கள் உட்பட ஏராளமான சாதனைகளை படைத்து ஹிட்மேன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். ஆனால் சமீப காலங்களில் பெரிய அளவில் ரன்களை குவிக்க தடுமாறும் அவர் பார்ம் அவுட் என்றும் சொல்ல முடியாத அளவுக்கு பெரும்பாலான போட்டிகளில் அதிரடியான நல்ல தொடக்கத்தை பெற்றாலும் அதை 40, 50, 70, 100 போன்ற பெரிய ரன்களாக மாற்ற முடியாமல் தவிக்கிறார்.

ஹபீஸ் விமர்சனம்:
அதற்கு ஆரம்ப காலங்களில் சாதாரண வீரராக விளையாடி வந்த அவர் 2021க்குப்பின் பொறுப்பேற்றுக் கொண்ட 3 வகையான இந்திய அணியின் கேப்டன்ஷிப் அழுத்தமே காரணம் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் முகமது ஹபீஸ் சமீபத்தில் தெரிவித்திருந்தார். 2017 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் கேப்டனாக செயல்பட்டு பேட்டிங்கிலும் சக்கை போடு போட்ட விராட் கோலியே இறுதியில் பணிச்சுமை மற்றும் அழுத்தம் காரணமாக பார்மை இழந்து ரன்களை குவிக்க தடுமாறி அந்த பதவிகளை ராஜினாமா செய்தார்.

Hafeez

அப்படிப்பட்ட நிலையில் அதே போல் கேப்டன்ஷிப் அழுத்தத்தால் ரோகித் சர்மா பார்ம் இழந்ததாக தெரிவித்த முகமது ஹபீஸ் அதனால் அவர் குழப்பமும் கவலையும் அடைந்து பலவீன கேப்டனாக தோன்றுவதாக விமர்சித்திருந்தார். அதனால் கேப்டன்ஷிப் பதவியில் நீண்ட காலம் நீடிக்க முடியாது என்றும் தெரிவித்திருந்த அவர் பார்மை மீட்டெடுக்க அந்த பதவிகளை ராஜினாமா செய்யும் முடிவை யோசிக்குமாறு கூறியிருந்தார்.

- Advertisement -

அதற்கு இந்திய ரசிகர்கள் அதிருப்தியடைந்து எதிர்ப்பும் பதிலடியும் கொடுத்த நிலையில் அந்த வரிசையில் மற்றொரு முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தரும் இணைந்துள்ளார். கேப்டன்ஷிப் பதவியால் ஏதோ ஒரு இடத்தில் ரோகித் சர்மா தடுமாறி நிற்பதாக தெரிவிக்கும் அவர் அந்த பொறுப்பில் மகிழ்ச்சியுடன் செயல்படவில்லை என்றும் கூறியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ரோகித் சர்மா கேப்டனாக ஏதோ ஒரு இடத்தில் சிக்கியுள்ளார் என்று நினைக்கிறேன். அவர் அந்தப் பதவியை மகிழ்ச்சியாக செய்வதாக தெரியவில்லை. அதனால் ஏற்பட்ட அழுத்தத்தால் பாதித்துள்ள அவர் அதன் காரணமாக பார்மையும் இழந்துள்ளார்”

“மறுபுறம் காயத்திலிருந்து குணமடைந்து திரும்பிய ஹர்திக் பாண்டியா மிகச்சிறந்த வீரராக மாறியுள்ளார். அவர் ஐபிஎல் 2022 தொடரில் தனது குஜராத் அணியை சிறப்பாக வழிநடத்தி கோப்பையை வென்று காட்டினார். அந்த வகையில் இந்தியாவின் அடுத்த டி20 கேப்டனாக வருவதற்கு அவர் தான் பவர்புல் வீரராக திகழ்கிறார்” என்று கூறினார். அதாவது கேப்டன்ஷிப் அழுத்தத்தால் ரோகித் சர்மா பார்மை இழந்த தவிப்பதால் அதில் நீண்ட காலம் நீடிக்க முடியாது என்று தெரிவிக்கும் சோயப் அக்தர் மகிழ்ச்சியுடன் செய்யாத அந்த வேலையால் அவருடைய பேட்டிங்க்கும் பாதித்துள்ளதாகம் கூறியுள்ளார்.

அதனால் அவர் பார்முக்கு திரும்ப கேப்டன்ஷிப் பதவிகளை துறப்பதே ஒரே வழி என்று தெரிவிக்கும் அவர் அதுபோன்ற சூழ்நிலையில் அடுத்ததாக இந்திய அணியை வழிநடத்த ஹர்திக் பாண்டியா தகுதியானவர் என்றும் ஆலோசனை தெரிவித்துள்ளார். இருப்பினும் 37 போட்டிகளில் உலகிலேயே அதிகபட்சமாக 83.3% என்ற வெற்றி சராசரியில் 31 வெற்றிகளை பதிவு செய்துள்ள ரோகித் சர்மா மகிழ்ச்சியாக கேப்டன்ஷிப் செய்யவில்லையெனில் எப்படி இவ்வளவு வெற்றிகளை பதிவு செய்ய முடியும் என்று இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுக்கின்றனர்.

Advertisement