டி20 கிரிக்கெட்டில் அபாயகரமான வீரர் என்றால் அது அந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் தான் – மேத்யு ஹைடன் வெளிப்படை

Haydan
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது பாதி போட்டிகளை நெருங்கியுள்ள வேளையில் இந்த தொடரில் பங்கேற்றுள்ள பத்து அணிகளுமே பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்காக தங்களது கடுமையான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றன. சாம்பியன் அணிகள் தடுமாறி வரும் வேளையில் இளம் வீரர்களைக் கொண்ட சில அணிகள் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன.

அதோடு இந்த முறை நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் பெரிய பெரிய வீரர்களை தாண்டி டொமஸ்டிக் கிரிக்கெட்டில் அற்புதமான ஆட்டத்தை வெளிவந்த இந்தியாவை சேர்ந்த இளம் வீரர்கள் பலரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதன் காரணமாக இந்த தொடரில் ஏகப்பட்ட புதுப்புது நட்சத்திரம் தோன்றியுள்ளன.

- Advertisement -

இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் அபாயகரமான வீரர் யார்? என்ற கேள்விக்கு தற்போது சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரான மேத்யூ ஹைடன் சில கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை ஜாம்பவான் வீரர்களையே அபாயகரமான வீரர்கள் என்று பெரும்பாலானோர் தங்களது கருத்துக்களை தெரிவிப்பார்கள். ஆனால் ஆஸ்திரேலியாவை சேர்ந்த மேத்யூ ஹைடன் வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த நிக்கோலஸ் பூரான் தான் அபயகரமான வீரர் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

- Advertisement -

நிக்கோலஸ் பூரானால் வேகப்பந்து வீச்சு மற்றும் சுழற்பந்து வீச்சு என எந்த வகையான பந்துவீச்சுக்கு எதிராகவும் அதிரடியாக விளையாட முடியும். என்னை பொறுத்தவரை தற்போதைய கிரிக்கெட் உலகத்திலேயே பூரான் தான் அபாயகரமான வீரர் என்று கூறுவேன். ஏனெனில் அவரால் பெரிய பெரிய சிக்ஸர்களை எளிதாக அடிக்க முடியும்.

இதையும் படிங்க : இதே நினைப்போட முடிவெடுத்தா இந்திய அணி பாதாளதுக்கு போய்டும்.. பாண்டியா பற்றி பிசிசிஐ’யை எச்சரித்த கில்கிறிஸ்ட்

லக்னோ அணிக்கு எதிரான போட்டியின் போது ருதுராஜ் கெய்க்வாட் விளையாடிய விதத்தில்தான் ஸ்டாய்னிஸ் விளையாடினார். ஆனால் போட்டியின் பின் வரிசையில் களமிறங்கிய பூரான் அதிரடியாக விளையாடி மாற்றத்தை ஏற்படுத்தி விட்டார். அவரது இன்னிங்ஸ்தான் அந்த வெற்றிக்கு காரணமாகவும் அமைந்தது. பூரானை எப்படி பயன்படுத்தினால் நல்லதோ அந்த வகையில் லக்னோ அணி பயன்படுத்தி வருகிறது என்று ஹைடன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement