- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஸ்டார்டிங்ல இருந்து எதுவுமே சரியா போகல.. இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் – ஆப்கானிஸ்தான் கேப்டன் பேட்டி

இந்திய அணிக்கு எதிராக ஜூன் 6-ம் தேதி முள்ளான்பூர் நகரில் துவங்கிய டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடியிருந்த ஹஸ்மத்துல்லா ஷாகிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியானது இந்திய அணிக்கு எதிரான நடைபெற்ற இந்த போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து இந்த தொடரை இந்திய அணியிடம் இழந்தது. அந்த வகையில் நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுகளை இழந்து 564 ரன்களை குவித்தது.

இந்திய அணிக்கெதிரான தோல்வி குறித்து பேசிய : ஆப்கானிஸ்தான் கேப்டன்

பின்னர் தொடர்ந்து விளையாடி ஆப்கானிஸ்தான் அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தங்களது முதல் இன்னிங்சில் 152 ரன்களிலும், இரண்டாவது இன்னிங்ஸில் 112 ரன்கள் மட்டுமே குவித்ததால் இந்திய அணியிடம் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாகிதி கூறியதாவது : இந்திய அணியின் மிகச் சிறந்த செயல்பாட்டிற்கு வாழ்த்துக்கள். இந்த நாள் எங்களுக்கு கடினமான நாளாக அமைந்தது. இந்த போட்டி முழுவதுமே எங்களுக்கு ஒரு கடினமாக போட்டியாக அமைந்தது. துவக்கத்தில் இருந்தே எதுவுமே சரியாக செல்லவில்லை.

குறிப்பாக இந்த போட்டியில் எங்களது பந்துவீச்சு சரியாக இல்லை. ஆனால் இந்திய வீரர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசி எங்களை வீழ்த்தியுள்ளனர். இந்த வடிவத்தை பொறுத்தவரை எங்களுக்கு நிறைய அனுபவம் கிடையாது ஆனால் கிடைக்கும் வாய்ப்புகளில் டெஸ்ட் போட்டிகளில் எவ்வாறு விளையாட வேண்டும் என்பதை மெல்ல மெல்ல கற்று வருகிறோம்.

- Advertisement -

இதையும் படிங்க : பாலோ ஆன் வழங்கி நாங்கள் பெற்ற இந்த வெற்றிக்கு காரணம் இதுதான் – சுப்மன் கில் பேட்டி

இந்தியா போன்ற ஒரு பெரிய அணியை எதிர்த்து அதன் சொந்த மைதானத்தில் விளையாடுவது எளிதானது கிடையாது. இந்த போட்டியில் இருந்து நிறைய பாசிட்டிவ்வான விடயங்களை கற்றுக் கொண்டு அடுத்த தொடரை நோக்கி செல்லவுள்ளோம் என ஹஸ்மத்துல்லா ஷாகிதி கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -