
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஹஸ்மத்துல்லா ஷாகிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியானது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தற்போது பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியில் தோல்வியை சந்தித்த ஆப்கானிஸ்தான் அணி நேற்று லக்னோ நகரில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணிக்கு எதிராக 170 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து இந்த தொடரை இந்திய அணியிடம் இழந்துள்ளது.
அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 402 ரன்களை குவிக்க பின்னர் 43 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 44.3 ஓவர்களில் 232 ரன்களுக்கு சுருண்டது. இதன் காரணமாக இந்திய அணி 170 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாஹிதி கூறியதாவது : டாஸ் என்ற ஒரு விடயத்திற்குள் எல்லாவற்றையும் அடக்க முடியாது. ஏனெனில் இந்த போட்டியின் போது நாங்கள் முதலில் பந்து வீசுவது சரியாக இருக்கும் என்று நினைத்தோம். அந்த அளவிற்கு எங்களிடம் பந்துவீச ஏகப்பட்ட பௌலர்கள் இருக்கின்றனர். ஆனாலும் நாங்கள் முதல் 20 ஓவர்கள் சரியான இடத்தில் பந்து வீசவில்லை. அதன் காரணமாகவே இந்திய அணியின் வீரர்கள் அதிரடியாக ரன் குவித்தனர்.
இந்த ஆடுகளத்தில் நிறைய வெயிலும் இருந்தது. இருந்தாலும் இதுபோன்ற மைதானங்களில் சரியான இடங்களில் பந்துவீச வேண்டியது அவசியம். அப்படி சரியான லைன் மற்றும் லென்த்தில் வீசாமல் எதிரணிக்கு எளிதாக போட்டியை விட்டுக் கொடுத்தால் ரன்கள் நிறைய செல்லும் என்பதை இந்த போட்டியில் கற்றுக் கொண்டோம். அதேபோன்று இப்படி ஒரு செயல்பாட்டை வெளிப்படுத்தினால் நிச்சயம் தோல்வி தான் பரிசாக கிடைக்கும் என்பதையும் உணர்ந்தோம்.
இதையும் படிங்க : நல்ல ஸ்டார்ட் கெடச்சா.. இதை செய்யனும் அதுதான் என்னோட பழக்கமா மாறிடுச்சு – சுப்மன் கில் பேச்சு
ஆனாலும் இந்த போட்டியில் ஏகப்பட்ட விடயங்களை கற்றுக் கொண்டதாக நினைக்கிறேன். இந்த தொடர் உண்மையிலேயே ஒரு கடினமான தொடராக எங்களுக்கு அமைந்தது. இந்தியாவில் இந்திய அணியை எதிர்த்து விளையாடுவது என்பது சாதாரண விடயம் கிடையாது. இந்த முதல் இரண்டு போட்டியிலும் கிடைத்த பாசிட்டிவான விடயங்களை வைத்து சென்னையில் நடைபெற இருக்கும் மூன்றாவது போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம் என ஹஸ்மத்துல்லா ஷாஹிதி கூறியது குறிப்பிடத்தக்கது.