
தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரரான ஹாசிம் அம்லா தென்னாப்பிரிக்க அணிக்காக கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை தனது 15 ஆண்டுகால கிரிக்கெட் கரியரில் 124 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 181 ஒருநாள் போட்டிகள் மற்றும் 44 டி20 போட்டிகளில் அந்த அணிக்காக விளையாடியுள்ளார். மிக அனுபவம் வாய்ந்த வீரரான அவர் ஐபிஎல் தொடரிலும் இரண்டு ஆண்டுகள் விளையாடியுள்ளார்.
அந்த வகையில் 2016 மற்றும் 17-வது ஆண்டுகளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக அவர் விளையாடியிருந்தார். மொத்தம் 16 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் இரண்டு சதம் மற்றும் மூன்று அரைசதம் என 44 ரன்கள் சராசரியுடன் 141 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 577 ரன்கள் குவித்துள்ளார்.
அதற்கு அடுத்து ஐபிஎல் போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காததால் பின்னர் சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வினை அறிவித்திருந்தார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக பார்க்கப்படும் அவர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடியதில் மிகப் பெருமை என்றும் அப்படி ஐபிஎல் தொடரில் விளையாடும் போது தான் சந்தித்த கடினமான பவுலர் யார்? என்பது குறித்த தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : உண்மையிலேயே ஐபிஎல் போட்டிகளில் நான் சந்தித்த கடினமான பவுலர் யார்? என்றால் அது ஜஸ்ப்ரீத் பும்ரா தான். அவர் ஒரு அற்புதமான பவுலர். இத்தனை ஆண்டு காலமாக இந்திய அணிக்காக அவர் விளையாடுவரும் விதத்தை பார்த்தாலே அவர் எப்பேர்ப்பட்ட பவுலர் என்பது உங்களுக்கு நன்றாக புரியும்.
ஜஸ்ப்ரீத் பும்ரா மிகச்சிறந்த பந்துவீச்சாளர். அவரால் எந்த ஒரு பேட்ஸ்மேனுக்கு எதிராகவும் மிகச் சிறப்பான பந்துவீச்சை எந்த ஒரு பார்மெட்டிலும் வெளிப்படுத்த முடியும். இந்திய மண்ணில் அவரை எதிர்த்து விளையாடுவது சாதாரண விடயம் கிடையாது. அவர் நம்ப முடியாத அளவிற்கு மிகச் சிறந்த பவுலர் என ஹாசிம் அம்லா கூறியுள்ளார்.
இதையும் படிங்க : ஜஸ்ப்ரீத் பும்ராவை விட சிறந்த டி20 பவுலர் தற்போதைக்கு இவர்தான்.. நம்பர் 1 பவுலரை பாராட்டிய – பத்ரிநாத்
மேலும் ஒருவேளை தனக்கு மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் மும்பை இந்தியன்ஸ் அல்லது சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரு அணிகளில் ஒன்றில் விளையாட விருப்பம் என்றும் ஹாசிம் அம்லா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.