இவரும் டீம்ல இருந்து போய்ட்டாரு. 2 ஆவது போட்டி இந்தியாவுக்கு தான் சாதகம் – ஹசிம் ஆம்லா கருத்து

Amla
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று துவங்க உள்ளது. இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இன்று துவங்க இருக்கும் இந்த இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி வெற்றியை கைப்பற்றும் பட்சத்தில் தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைக்கும்.

INDvsRSA

- Advertisement -

முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணிக்காக விளையாடிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குயின்டன் டி காக் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரது இந்த ரிட்டயர்மென்ட் அறிவிப்பு ரசிகர்கள் அனைவர்க்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அவரது இந்த ஓய்வு குறித்து பேசியுள்ள தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான ஹசிம் ஆம்லா கூறுகையில் : டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து டிகாக் ஓய்வு பெற்றது தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் ஆர்டரை தற்போது பலமிழக்க வைக்க வைத்துள்ளது. ஏனெனில் மிடில் ஆர்டரில் பவுமா மற்றும் டிகாக் ஆகியோர்தான் அணிக்கு வலுசேர்க்கும் வகையில் விளையாடி வந்தனர்.

dekock 1

ஆனால் தற்போது அவரும் ஓய்வு பெற்று விட்டதால் இனி பவுமா தான் சற்று முன்சென்று விளையாட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதோடு தற்போதுள்ள அணியில் மார்க்கராம், எல்கர் மற்றும் பாவுமா ஆகியோரை தவிர மற்ற அனைத்து இளம் வீரர்களும் தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும் அப்போதுதான் இந்திய அணிக்கு எதிராக சரியான போட்டியை அளிக்கமுடியும் என்றும் ஆம்லா கூறினார்.

- Advertisement -

இதையும் படிங்க : நீங்க ஒரு சீனியர் வீரர். இப்படியே நீங்க சொதப்புனா ரிட்டயர்டு ஆக வேண்டியதுதான் – சரன்தீப் சிங் எச்சரிக்கை

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : தென்னாப்பிரிக்க மண்ணில் இதுவரை நாம் தொடரை இழந்தது கிடையாது. ஆனால் இம்முறை இந்திய அணி தொடரை வெல்ல வாய்ப்பு உள்ளது. என்னை பொறுத்தவரை இந்த இரண்டாவது போட்டியிலும் இந்திய அணியே வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது என ஹசிம் ஆம்லா வெளிப்படையாக தனது கருத்தினை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement