நீங்க ஒரு சீனியர் வீரர். இப்படியே நீங்க சொதப்புனா ரிட்டயர்டு ஆக வேண்டியதுதான் – சரன்தீப் சிங் எச்சரிக்கை

Sarandeep-singh
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலை வகிக்கின்றது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2 ஆவது டெஸ்ட் போட்டி ஜனவரி 3 ஆம் தேதி ஜோகனஸ்பர்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Agarwal

- Advertisement -

இந்த முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற முக்கிய காரணமாக கே.எல் ராகுல் திகழ்ந்தார். ஏனெனில் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் ராகுல் 123 ரன்களை அடித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அவரை தவிர்த்து அகர்வால் மற்றும் பின்வரிசை ஆட்டக்காரர்கள் ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால் மிடில் ஆர்டரில் விராட் கோலி, ரஹானே, புஜாரா என சீனியர் வீரர்கள் ரன்களை குவிக்க தடுமாறினர்.

இந்நிலையில் இந்த தொடரில் இனிவரும் போட்டிகளிலும் புஜாரா சொதப்பும் பட்சத்தில் அவர் அணியில் இருந்து ஓய்வு பெற வேண்டிய அவசியம் ஏற்படும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சரன்தீப் சிங் கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில் : தற்போது இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் ராகுலையே அதிக, சார்ந்து இருக்கிறது. ஆனால் அவரை மட்டுமே நம்பியிருக்க முடியாது. விராட் கோலியும் தற்போது சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பார்மில் இல்லை.

pujara

எனவே நிச்சயம் அனைவரும் ரன்கள் குவித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதிலும் குறிப்பாக புஜாரா ரன்களை அடித்தே ஆக வேண்டும். ஏனெனில் ஷ்ரேயாஸ் ஐயர், விஹாரி, சூர்யகுமார் யாதவ் போன்ற இளம் வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களது இடத்திற்காக காத்திருக்கின்றனர். இவ்வேளையில் சீனியர் வீரர் என்ற பெயரில் அணியில் இடம்பெற்று வரும் புஜாரா தொடர்ந்து சொதப்பும் பட்சத்தில் ஓய்வு பெற வேண்டியதை தவிர வேறு வழி இல்லை என்று கூறியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : ஜனவரி 11 ஆம் தேதிக்கு முன் விராட் கோலி எல்லா கேள்விக்கும் பதிலளிப்பார் – டிராவிட் அதிரடி அறிக்கை

மேலும் ஷ்ரேயாஸ் ஐயர் சதம் அடித்து விட்டு தனது இடத்திற்காக காத்திருப்பதால் நிச்சயம் சீனியர் வீரர்கள் சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம் என்று அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement