டி20 உ.கோ : ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தி அசத்திய இலங்கை வீரர் – இதுல உள்ள ஸ்பெஷல் என்ன தெரியுமா?

hasaranga
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் t20 உலகக்கோப்பை தொடரானது தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 சுற்று தற்போது இறுதி கட்டத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இந்த தொடரில் பல்வேறு உலக சாதனைகள் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்று இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டியிலும் ஒரு உலக சாதனை படைக்கப்பட்டது.

hasaranga 1

- Advertisement -

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களின் முடிவில் 142 ரன்களை மட்டுமே குவித்தது. அதனையடுத்து 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி விளையாடியபோது இந்த போட்டியில் 15 ஓவரை வீசிய இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ஹசரங்கா அந்த ஓவரின் கடைசி பந்தில் தென் ஆப்பிரிக்க அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மார்க்ரம்மை போல்டாக்கி ஆட்டமிழக்க வைத்தார்.

அதன் பின்பு மீண்டும் 18-வது ஓவரை ஹசரங்கா வீச அந்த ஓவரின் முதல் பந்தில் பவுமா கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதனைத் தொடர்ந்து இரண்டாவது பந்தில் பிரெஸ்டோரியஸ் டக் அவுட் ஆக டி20 உலக கோப்பையில் ஹசரங்கா ஹாட்ரிக் வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் டி20 உலக கோப்பை போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த மூன்றாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார்.

hasaranga 2

இதற்கு முன்னதாக இதே தொடரில் நெதர்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் அயர்லாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் கர்டிஸ் கேம்பர் ஹாட்ரிக் வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : நோட் பண்ணிக்கோங்க. இந்த 2 அணிகள் தான் உலககோப்பை பைனல்ல மோதும் – பென் ஸ்டோக்ஸ் கணிப்பு

ஏற்கனவே 2007ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் வங்கதேச அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்களை பிரட் லீ முதல் முறையாக டி20 உலக கோப்பை தொடரில் ஹாட்ரிக் வீழ்த்தியிருந்தார். அதனை தொடர்ந்து இந்த தொடரில் இரண்டு வீரர்கள் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement