இந்திய வீரரான இவருக்கு எதிராக பந்துவீசுவது ரொம்ப கஷ்டம். ஆனா அது கோலி இல்ல – ஹசன் அலி கருத்து

Hasan-Ali

பாகிஸ்தான் அணியை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளரான ஹஸன் அலி கடந்த 2016ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக அறிமுகமாகி விளையாடி வருகிறார். இதுவரை 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 57 விக்கெட்டுகளையும், 54 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 83 விக்கெட்டுகளையும், 36 டி20 போட்டிகளில் விளையாடி 48 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த சில மாதங்களாக வெற்றிகரமாக பந்துவீசி வரும் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக பார்க்கப்படுகிறார்.

ஹஸன் அலி கடைசியாக நடைபெற்ற 4 டெஸ்ட் போட்டிகளில் 26 விக்கெட்டுகளை கைப்பற்றி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். இந்நிலையில் தற்போது மற்ற கிரிக்கெட் வீரர்களைப் போலவே இவரும் சமூக வலைதளம் மூலமாக தனக்கு எதிராக சிறப்பாக பேட்டிங் செய்யும் இந்திய வீரர் குறித்து தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

தனது சிறப்பான வேகப்பந்து வீச்சின் மூலம் பல்வேறு பேட்ஸ்மேன்களை திணறடித்து வரும் இவர் ரோகித் சர்மாவிற்கு எதிராக பந்து வீசுவது கடினம் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : தற்போதைய கிரிக்கெட் உலகில் ரோகித் சர்மாவிற்கு எதிராக பந்து வீசுவது மிகவும் கடினம். அவருக்கு எதிராக பந்துவீசும் போது எந்த ஒரு பந்துவீச்சாளருக்கும் அது சவாலாகத்தான் இருக்கும்.

Rohith

ஏனெனில் நமது பந்து வீச்சு லைனை சற்று இழந்தாலும் அவர் மைதானத்தின் எந்த பகுதிக்கும் பந்து விளாசுவார். ரோகித் சர்மாவை நான் 2018 ஆசியா கப், 2019 உலகக்கோப்பை, 2017 சம்பியன்ஸ் டிராபி ஆகிய போட்டிகளில் எதிர்த்து விளையாடி உள்ளேன். ஆனாலும் அவருக்கு எதிராக நிறைய பந்து வீசியது கிடையாது. ஒரு போட்டியின் போது ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி செட்டாகி அன்றைய நாள் அவருடைய நாளாக இருக்கும் பட்சத்தில் பந்துவீச்சாளர்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள்.

- Advertisement -

அவரிடம் பலமாக அடிக்கும் திறன் உள்ளது. அவர் ஒருமுறை சிறப்பாக ஆட ஆரம்பித்து விட்டால் பந்து வீச்சாளரை எந்த மூளைக்கும் அடிக்கும் திறமை படைத்தவர். குறிப்பாக அவருடைய பிக்கப் ஷாட் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று ஹஸன் அலி கூறியுள்ளார். 26 வயதான ஹசன் அலி தற்போது பாகிஸ்தான் அணிக்காக விளையாடுவது மட்டுமின்றி பிஎஸ்எல் தொடரிலும் கலந்து கொண்டு விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement