நான்கை 5ஆக மாற்றியவர்.. இந்தியாவில் மிஸ்ஸானாலும் பாபர் அசாம் கிங் ஆஃப் பாகிஸ்தான்.. ஹசன் அலி பேட்டி

Hasan Ali
- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீப காலங்களாகவே திண்டாட்டமாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக 1992 சாம்பியமான பாகிஸ்தான் பாபர் அசாம் தலைமையில் சமீபத்திய வருடங்களில் தொடர்ச்சியாக வெற்றிகளை பெற தடுமாறி வருகிறது. சொல்லப்போனால் ஜிம்பாப்வே, அயர்லாந்து போன்ற கத்துக்குட்டி அணிகளிடம் வெற்றிகளை பெறுவதற்கே பாகிஸ்தான் தடுமாறி வருவது அந்நாட்டு ரசிகர்களையும் முன்னாள் வீரர்களையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

குறிப்பாக இந்தியாவில் நடைபெற்ற 2023 ஐசிசி உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானிடம் முதல் முறையாக பாகிஸ்தான் அவமான தோல்வியை சந்தித்தது. அதே போல கடந்த மாதம் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையில் கத்துக்குட்டியான அமெரிக்காவிடம் அதுவும் சூப்பர் ஓவரில் பாகிஸ்தான் அவமானத் தோல்வியை சந்தித்தது. அதனால் பாபர் அசாம் மீண்டும் கேப்டன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

- Advertisement -

கிங் ஆஃப் பாகிஸ்தான்:
ஏனெனில் பேட்டிங் துறையின் முதன்மை வீரராக போற்றப்படும் அவர் தொடர்ச்சியாக பெரிய ரன்களை எடுக்காமல் தோல்விக்கு காரணமாக அமைந்து வருகிறார். அந்த சூழ்நிலையில் பாபர் அசாம் பாகிஸ்தானின் கிங் என்று சமீபத்தில் பாராட்டிய சக வீரர் ஹசன் அலி தம்முடைய கேப்டனுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். ஆனால் அதற்காக தம்மை பலரும் கடுமையாக திட்டியதாக ஹஸன் அலி தற்போது வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஆனால் இப்போதும் பாபர் அசாம் பாகிஸ்தானின் கிங் என்று அவர் கூறியுள்ளார். மேலும் விராட் கோலி, வில்லியம்சன், ஸ்மித், ஜோ ரூட் மட்டுமே இடம் வகித்த ஃபேப் 4 வீரர்களை பாபர் அசாம் 5 வீரர்கள் கொண்ட பட்டியலாக மாற்றியதாகவும் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கிங் இதை செய்வார் என்று சொன்ன நாளிலிருந்து எனக்கு அதிகப்படியான திட்டுக்கள் வருவதை நான் கவனித்தேன்”

- Advertisement -

“பாபர் அசாம் என்னுடைய கிங். அவர் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் கிங். அவர் எப்போதும் கிங்’காக இருப்பார். ஏனெனில் அவர் அந்தளவுக்கு தரமான பேட்ஸ்மேன். இதற்காக மீண்டும் என்னை பலரும் திட்டுவார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அவர் பாகிஸ்தானின் சிறந்த பேட்ஸ்மேன் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். கேப்டனாக இதுவரை அவர் பெரிய வெற்றிகளை பெற்றதில்லை”

இதையும் படிங்க: 79/6.. இங்கிலாந்திடம் தோல்வியின் பிடியில் திணறும் வெ.இ.. உலகின் மகத்தான ஆல் ரவுண்டராக ஸ்டோக்ஸ் சாதனை

“ஆனாலும் அவர் சிறந்தவர். அவர் பாகிஸ்தான் பேட்டிங் வரிசையின் கிங். இந்தியாவில் கடந்த வருடம் நடைபெற்ற உலகக் கோப்பையில் மட்டுமே அவர் சதமடிக்கவில்லை. மற்றபடி அனைத்து இடங்களிலும் அவர் அசத்தியுள்ளார். நீங்கள் ஃபேப் 4 பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் தற்போது பாபர் அசாம் காரணமாக அது ஃபேப் 5ஆக மாறியுள்ளது. எனது கருத்தில் இப்போதும் நான் மாறாமல் இருக்கிறேன்” என்று கூறினார்.

Advertisement