79/6.. இங்கிலாந்திடம் தோல்வியின் பிடியில் திணறும் வெ.இ.. உலகின் மகத்தான ஆல் ரவுண்டராக ஸ்டோக்ஸ் சாதனை

ENG vs WI Day 2
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இங்கிலாந்து தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அந்தத் தொடரின் முதல் போட்டி ஜூலை 10ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் எதிர்பார்த்ததை போலவே இங்கிலாந்தின் தரமான பந்து வீச்சில் திணறலாக விளையாடி 121 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு கேப்டன் ப்ரத்வெய்ட் 6, மெக்கன்சி 1, ஜேசன் ஹோல்டர் 0, டா சில்வா 0 என முக்கிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

பென் ஸ்டோக்ஸ் சாதனை:
அதிகபட்சமாக லூயிஸ் 27, காவெம் ஹோட்ஜ் 24, அதனேஷ் 23, அல்சாரி ஜோசப் 17 ரன்கள் எடுத்தனர். மறுபுறம் சொந்த மண்ணில் அனலாக பந்து வீசிய இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக அறிமுக வீரர் கஸ் அட்கிட்சன் 8 விக்கெட்டுகளை எடுத்தார். அதனால் அறிமுக டெஸ்ட் இன்னிங்ஸில் சிறந்த பவுலிங்கை பதிவு செய்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையும் அவர் படைத்தார்.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு பென் டுக்கெட் 3, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 4 ரன்களில் அவுட்டானார்கள். ஆனால் ஜாக் கிராவ்லி 76, ஒலி போப் 58, ஜோ ரூட் 68, ஹரி ப்ரூக் 50 ஜெமி ஸ்மித் 70 என மற்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் விளையாடி அரை சதமடித்தனர். அதனால் 371 ரன்கள் எடுத்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணியை விட 150 ரன்கள் முன்னிலை பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக ஜெய்டேன் சீல்ஸ் 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.

- Advertisement -

அதன் பின் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் மீண்டும் திணறலான பேட்டிங்கை வெளிப்படுத்தி 2வது நாள் முடிவில் 79/6 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணிக்கு மீண்டும் கேப்டன் பிரத்வெய்ட் 4, மெக்கன்சி 0, காவெம் ஹோட்ஜ் 4, லூயிஸ் 14, அதனேஷ் 22, ஜோசன் ஹோல்டர் 20 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். களத்தில் ஜோஸ்வா டா சில்வா 8* ரன்களுடன் உள்ளார்.

தற்போதைய நிலைமையில் இன்னும் வெஸ்ட் இண்டீஸ் 171 ரன்கள் தங்கியுள்ளதால் இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி பெற்று ஜேம்ஸ் ஆண்டர்சனை வழியனுப்ப தயாராகியுள்ளது. அதை விட இப்போட்டியில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இதுவரை 2* விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இதையும் சேர்த்து அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 201* விக்கெட்டுகள் மற்றும் 6320* ரன்கள் எடுத்துள்ளார்.

இதையும் படிங்க: போர் சர்கஸில் சேந்துக்கோங்க.. இங்கிலாந்து வீரர்கள் கெட்டுப்போக இந்தியா தான் காரணம்.. ஃஜெப்ரி பாய்காட் விளாசல்

இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 6000+ ரன்கள் மற்றும் 200+ விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற கேரி சோபர்ஸ் (8032 ரன்கள் – 235 விக்கெட்டுகள்), ஜேக் காலிஸ் (13289 ரன்கள் – 292 விக்கெட்டுகள்) ஆகியோரது உலக சாதனையை பென் ஸ்டோக்ஸ் சமன் செய்துள்ளார்.

Advertisement