- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இரண்டாவது போட்டிக்கு முன்னதாக கழட்டிவிடப்பட்ட ஹர்ஷித் ராணா.. என்ன நடந்தது? – விவரம் இதோ

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி கடந்த ஜூன் 20-ஆம் தேதி ஹெட்டிங்லி நகரில் துவங்கி நடைபெற்ற வேளையில் அந்த போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணியானது இந்த தொடரின் ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்துள்ளது.

டீமில் இருந்து வெளியேறி நாடு திரும்பும் ஹர்ஷித் ராணா :

அதனை தொடர்ந்து இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது எதிர்வரும் ஜூலை 2-ஆம் தேதி எட்ஜ்பேஸ்டன் நகரில் துவங்க இருக்கிறது. இதன் காரணமாக தற்போது இந்திய அணி தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.

- Advertisement -

முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பழி தீர்க்கும் விதமாக இரண்டாவது போட்டியில் இந்திய அணி விளையாடும் என்பதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அணியில் கூடுதல் வேகப்பந்து வீச்சாளராக இடம்பெற்றிருந்த ஹர்ஷித் ராணா எஞ்சியுள்ள இந்த தொடரில் இருந்து வெளியேறி நாடு திரும்புகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் ஏற்கனவே இந்திய அணி எட்ஜ்பேஸ்டன் நகருக்கு கிளம்பிய வேளையில் அந்த அணியுடன் அவர் பயணிக்கவில்லை. மேலும் அவர் அங்கிருந்து நேரடியாக நாடு திரும்புகிறார் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கு காரணம் யாதெனில் : இந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக இந்திய ஏ அணியில் இடம்பெற்றிருந்த ஹர்ஷித் ராணா அங்கு நடைபெற்ற பயிற்சி போட்டிகளில் பங்கேற்று விளையாடியிருந்தார்.

- Advertisement -

அவ்வேளையில் முதன்மை இந்திய அணியில் இடம்பெற்றிருந்த பல வீரர்களுக்கு காயம் மற்றும் சிறிய அளவிலான தசைப் பிடிப்பு இருந்ததன் காரணமாக கூடுதல் வீரராக ஹர்ஷித் ராணா இந்திய அணியுடன் பயணிப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இந்திய அணியில் உள்ள அனைத்து வீரர்களும் நல்ல உடற்தகுதியுடன், எந்த காயமுமின்றி இருப்பதினால் அவர் இந்த தொடருக்கான இந்திய வீரர்களுடன் இருக்க தேவையில்லை என்று கருதிய நிர்வாகம் அவரை இந்தியாவிற்கு திரும்புமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

இதையும் படிங்க : இதை செஞ்சும் இந்தியா தோத்தது அவமானம்.. 100க்கு 99 முறை ரிஷப் மாதிரி ஆள் தான் ஜெய்ப்பாங்க.. ஏபிடி பேட்டி

23 வயதான ஹர்ஷித் ராணா இந்திய அணிக்காக கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி 2 போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -