RCB vs LSG : கடைசி பாலில் நடந்த சர்ச்சை. அவுட் கொடுக்க மறுத்த அம்பயர் – ரூல்ஸ் சொல்வது என்ன?

Harshal-Patel
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது லீக் போட்டியானது நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், டூபிளெஸ்ஸிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது.

Pooran RCB vs LSg

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணியானது 20 ஓவர்களின் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் குவித்தது. பின்னர் 213 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய லக்னோ அணியானது ஸ்டோய்னிஸ் மற்றும் பூரான் ஆகியோரது அதிரடி காரணமாக கடைசி கட்டத்தில் வெற்றியை நோக்கி எளிதாக நகர்ந்தது.

இருந்தாலும் கடைசி ஓவரின் கடைசி பந்து வரை போட்டி நடைபெற்று கடைசி பந்தில் லக்னோ அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் கடைசி ஓவரில் ஐந்து ரன்கள் தேவை என்ற நிலையில் முதல் பந்தில் சிங்கிள் கிடைத்தது. அதன் பிறகு இரண்டாவது பந்தில் மார்க் வுட் கிளீன் போல்ட் ஆனார்.

Harshal

மூன்றாவது பந்தில் ரவி பிஷ்னோய் இரண்டு ரன்களை எடுக்க நான்காவது பந்தில் மீண்டும் சிங்கிள் கிடைத்தது. கடைசி இரண்டு பந்துகளுக்கு ஒரு ரன் தேவை என்கிற நிலையில் ஐந்தாவது பந்தில் உனட்கட் ஆட்டமிழந்தார். பின்னர் கடைசி ஒரு பந்திற்கு ஒரு ரன் அடித்தால் வெற்றி என்ற நிலை இருந்தது.

- Advertisement -

அப்போது கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே எஞ்சி இருந்ததால் எதிர்புறம் இருந்த பேட்ஸ்மேனை மான்கட் செய்ய 20-வது ஓவரை வீசிய ஹர்ஷல் பட்டேல் நினைத்தார். ஆனால் பந்துவீச ஓடிவந்த அவர் மான்கட் செய்யாமல் தவற விட்டு பின்னர் த்ரோ செய்து ரன் அவுட் அப்பீல் செய்தார். அப்போது களத்தில் இருந்த அமபயர் இது அவுட் இல்லை என்று அறிவித்தார். இதற்கு காரணம் யாதெனில் ரூல்ஸ் படி : மான்கட் செய்யும்போது பவுலர் முழுவதுமாக தனது கையை சுழற்றாமல் மான்கட் செய்து இருக்க வேண்டும். அதன் காரணமாகவே அம்பயர் நாட் அவுட் என்று மறுத்தார்.

இதையும் படிங்க : வீடியோ : ஒழுங்கா மன்கட் கூட பண்ண தெரியல, வெற்றியை நழுவ விட்ட ஆர்சிபியை கலாய்த்த சேவாக், டேல் ஸ்டைன் – ரசிகர்கள்

இதற்கு முன்னதாக அஸ்வின் பந்தை வீசும் முன்னர் சரியாக நிறுத்தி மான்கட் செய்திருப்பார். ஆனால் அந்த ரூல்ஸ் தெரியாமல் ஹர்ஷல் பட்டேல் கையை முழுவதுமாக சுழற்றிவிட்டு பின்னர் த்ரோ செய்ததாலேயே அந்த விக்கெட் மறுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement