சந்தேகமே வேணாம். அவங்க டீம் பேட்டிங் செம ஸ்ட்ராங் தான். அயர்லாந்து பேட்ஸ்மேன்களை பாராட்டிய – இந்திய வீரர்

Avesh-Khan
- Advertisement -

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று டப்ளின் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 225 ரன்களை குவித்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி சார்பாக சஞ்சு சாம்சன் 77 ரன்களையும், தீபக் ஹூடா 104 ரன்களையும் குவித்தனர். அதனைத் தொடர்ந்து 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணியானது 150 ரன்களை கூட தொடாது என்றே பலரும் நினைத்து இருப்பார்கள்.

Deepak Hooda 1

- Advertisement -

ஆனால் அதையெல்லாம் உடைக்கும் வகையில் அயர்லாந்து அணி முதல் ஓவரில் இருந்தே தங்களது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக அந்த அணியின் துவக்க வீரர்கள் பால் ஸ்டெர்லிங் மற்றும் ஆண்ட்ரூ பால்பர்னி ஆகிய இருவரும் இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை ஆரம்பத்திலிருந்தே புரட்டி எடுத்தார்கள் என்று கூறவேண்டும். அதிரடியான ஆட்டத்தை கையாண்ட துவக்க வீரர்கள் இருவரும் 8 பவுண்டரி மற்றும் 10 சிக்ஸர்களை விளாசி இந்திய அணியை பயமுறுத்தினர்.

அதோடு மிடில் ஆர்டரில் ஹாரி டெக்டர் மற்றும் பின்வரிசையில் ஜார்ஜ் டாக்ரெல் மற்றும் மார்க் அடெய்ர் போன்ற வீரர்கள் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்த இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 221 ரன்கள் வரை வந்து 4 ரன்கள் வித்தியாசத்தில் மிகச்சிறிய இடைவெளியிலேயே தோல்வியை சந்தித்தது. அவர்களது இந்த போராட்டம் தற்போது பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

Harry Tector

குறிப்பாக பவுண்டரிகளும், சிக்ஸர்களுமாக பறக்கவிட்ட அயர்லாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் மொத்தமாக இந்த இன்னிங்சில் 19 பவுண்டரிகளையும், 14 சிக்சர்களையும் விளாசினர். அவர்களது இந்த அதிரடியான பேட்டிங் பலரது பாராட்டுக்களையும் பெற்ற வேளையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷல் படேலும் அவர்களை புகழ்ந்து பேசியுள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : நாங்கள் 225 ரன்கள் எடுத்தும் எளிதாக வெற்றி பெறுவோம் என்று நினைத்தோம். ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் இவ்வளவு பெரிய ரன்களை குவிக்கும் போது எளிதாக நமது அணி வெற்றி பெறும். ஆனால் அயர்லாந்து வீரர்கள் மிகச் சிறப்பான பேட்டிங்கை இந்த போட்டியில் வெளிப்படுத்தினர். மைதானம் முழுவதும் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்ததால் அதனை அப்படியே சரியாக கையாண்ட அயர்லாந்து வீரர்கள் பிரமாதமாக விளையாடி விட்டார்கள்.

இதையும் படிங்க : IND vs IRE : கடைசி ஓவரில் கேப்டன் பாண்டியா என்னிடம் சொன்னது இதுதான் – நெகிழும் உம்ரான் மாலிக்

அவர்கள் விளையாடிய விதம் எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த ஒரு விஷயத்தில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம் அயர்லாந்து பேட்ஸ்மேன்கள் அனைவரும் மிகச் சிறப்பான தரமான பேட்டிங்கை வெளிப்படுத்துகின்றனர் என்று அயர்லாந்து பேட்ஸ்மேன்களை பாராட்டி ஹர்ஷல் படேல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement