IND vs IRE : கடைசி ஓவரில் கேப்டன் பாண்டியா என்னிடம் சொன்னது இதுதான் – நெகிழும் உம்ரான் மாலிக்

Hardik-Pandya-and-Umran-Malik
- Advertisement -

அயர்லாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்று வந்த 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2 – 0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா வைட் வாஷ் வெற்றியுடன் கோப்பையை வென்றது. கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாத நிலைமையில் ஐபிஎல் 2022 கோப்பையை வென்ற ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கிய இந்தியா ஜூன் 26இல் துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அதைத் தொடர்ந்து ஜூன் 28-ஆம் தேதியன்று நடைபெற்ற வெற்றியாளரை தீர்மானிக்கும் 2-வது போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா அதிரடியாக 225/7 ரன்கள் சேர்த்தது.

Team India Dinesh Karthik Ishan Kishan

- Advertisement -

இந்தியாவுக்கு அதிகபட்சமாக 9 பவுண்டரி 6 சிக்சருடன் தனது முதல் சதமடித்த தீபக் ஹூடா 104 (57) ரன்களை எடுக்க அவருடன் அற்புதமாக பேட்டிங் செய்த சஞ்சு சாம்சன் தனது முதல் அரை சதத்தை அடித்து 9 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 77 (42) ரன்கள் எடுத்தார். மேலும் 176 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடி டி20 கிரிக்கெட்டில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய ஜோடியாக சாதனை படைத்தது. அயர்லாந்து சார்பில் அதிகபட்சமாக மார்க் அடைர் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

அசத்திய உம்ரான்:
அதை தொடர்ந்து 226 என்ற கடினமான இலக்கை துரத்திய அயர்லாந்து ஆரம்பம் முதலே அதிரடியாக பேட்டிங் செய்து வெற்றியை நெருங்கியது. அந்த அணிக்கு 72 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த பால் ஸ்டெர்லிங் 40 (18) ரன்களிலும் கேப்டன் ஆண்டி பால்பிரிண் 60 (37) ரன்களில் ஆட்டமிழக்க நடு வரிசையில் வந்த கெரத் டிலானி 0 (4) டூக்கர் 5 (9) என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இருப்பினும் கடைசி நேரத்தில் டெக்டர் 5 பவுண்டரியுடன் 39 (28) ரன்கள் எடுத்ததால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

IND vs IRE Umran Malik

அதை மேலும் பரபரப்பாகும் வகையில் ஜார்ஜ் டாக்ரெல் 34* (16) ரன்களும் மார்க் அடைர் 23* (12) ரன்களும் எடுத்து கடைசி பந்து வரை வெற்றிக்காக போராடிய போதிலும் அயர்லாந்து 4 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியடைந்தது. குறிப்பாக கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்ட போது அதை ஒரு போட்டியில் மட்டுமே விளையாடிய அனுபவம் கொண்ட இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கிடம் கேப்டன் ஹர்திக் பாண்டியா நம்பி வழங்கினார். அதில் முதல் 3 பந்துகளில் 9 ரன்களை கொடுத்த அவர் வெற்றியை எதிரணிக்கு பரிசளிக்கும் வகையில் பந்து வீசினார்.

- Advertisement -

பாண்டியாவின் சொற்கள்:
அப்போது அவரின் அருகே சென்ற கேப்டன் ஹர்திக் பாண்டியா ஒரு சில ஆலோசனைகளை வழங்கினார். அதை பயன்படுத்திய உம்ரான் மாலிக் கடைசி 3 பந்துகளில் வெறும் 3 ரன்கள் மட்டுமே கொடுத்து இந்தியாவிற்கு திரில் வெற்றியை பெற்றுக் கொடுக்க முக்கிய பங்காற்றினார். 140 – 150 கி.மீ என அதிவேகமான பந்துகளை வீசி அனைவரின் பாராட்டுகளையும் பெற்ற அவர் அதற்கு ஈடாக ரன்களை வாரி வழங்குவதால் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார். நேற்றைய போட்டியில் கூட 4 ஓவர்களை வீசிய அவர் 41 ரன்களை வாரி வழங்கினார்.

Umran Malik

இந்நிலையில் தன்னை நம்பி கடைசி ஓவரை வழங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு நன்றி தெரிவித்துள்ள உம்ரான் மாலிக் கடைசி கட்ட பரபரப்பில் தருணங்களில் அவர் கூறியது என்ன என்பதைப் பற்றி போட்டி முடிந்த பின் பேசியது பின்வருமாறு. “இந்தியாவுக்கு விளையாட வேண்டுமென்ற எனது கனவு நிஜமாகியுள்ளது. புவனேஸ்வர் பைய்யாவிடம் எனது தொப்பியை வாங்கும் போது கிட்டத்தட்ட நான் கண் கலங்கிவிட்டேன். அத்துடன் கடைசி ஓவரில் வெற்றிகரமாக 17 ரன்களை நான் கட்டுபடுத்தி இந்தியா தொடரை வென்றது நல்ல உணர்வை கொடுக்கிறது”

இதையும் படிங்க : ஐபிஎல் 2023 சீசனில் வெறித்தனமான கம்பேக் கொடுக்க இப்போதே மும்பை போட்ட மாஸ்டர் பிளான், முழுவிவரம் இதோ

“நான் ஆரம்பத்திலேயே ஒய்ட் பந்தாக ஓவரை தொடங்கினேன். பின்னர் என்னிடம் வந்த ஹர்திக் பாண்டியா சாதாரண பந்தை வீசுமாறு கேட்டுக் கொண்டார். அதைப் பின்பற்றிய எனக்கு நோ பால் கிடைத்தது. கடைசியில் 3 பந்துகளில் 8 ரன்கள் தேவைப்பட்ட போது என்னிடம் வந்த ஹர்திக் பாண்டியா உங்களால் 2 டாட் பந்துகளை வீச முடியுமானால் நாம் போட்டியை வென்று விடுவோம் என்று நம்பிக்கை கொடுத்தார். அவரின் அந்த நம்பிக்கைக்கு நன்றி உடையவனாக இருக்கிறேன். மேலும் அந்த சமயத்தில் கடவுளும் என்னை கைவிடவில்லை” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

Advertisement