இவரால் நிச்சயம் டி20 உ.கோ’யில் தோல்வி கன்பார்ம் – 3 மோசமான உலகசாதனை படைத்த பவுலரால் இந்திய ரசிகர்கள் கவலை

IND
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக பங்கேற்று வந்த 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை 2 – 1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ள இந்தியா வரலாற்றில் முதல் முறையாக சொந்த மண்ணில் அந்த அணிக்கு எதிராக ஒரு டி20 கிரிக்கெட் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது. விரைவில் நடைபெறும் உலகக் கோப்பையில் ரோகித் சர்மா தலைமையில் கோப்பையை வெல்வதற்காக கடந்த ஒரு வருடமாக பங்கேற்ற அத்தனையும் இருதரப்பு தொடர்களிலும் தோல்வியடையாமல் வென்று உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக முன்னேறிய இந்தியா சமீபத்திய ஆசிய கோப்பையில் தோற்று பின்னடைவை சந்தித்தது. இருப்பினும் அதற்காக துவளாமல் உலக டி20 சாம்பியன் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து தற்போது தென் ஆப்பிரிக்காவையும் சாய்த்துள்ள இந்தியா வெற்றி முகத்துடன் உலகக் கோப்பையில் பங்கேற்க ஆஸ்திரேலியா புறப்பட தயாராகியுள்ளது.

INDIA Arshdeep Singh Harshal Patel

- Advertisement -

ஆனாலும் கடைசி நேரத்தில் காயத்தால் விலகிய முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதில் சிறப்பாக செயல்பட வேண்டிய புவனேஸ்வர் குமார் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்குவது இந்திய ரசிகர்களுக்கு கவலையாகவே இருந்து வருகிறது. குறிப்பாக இவரில்லாமல் போனதால் ஆசிய கோப்பையில் தோற்றோம் என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்த ஹர்ஷல் படேல் காயத்திலிருந்து குணமடைந்தது களமிறங்கிய ஆஸ்திரேலிய தொடரின் முதல் போட்டியிலேயே 18வது ஓவரில் எதிரணிக்கு 40 ரன்கள் தேவைப்பட்ட போது 22 ரன்களை வாரி வழங்கி வெற்றியை தாரை வார்த்தார்.

தோல்வி கன்பார்ம்:
அதன் பின் நாக்பூர், ஹைதெராபாத் நகரங்களில் நடைபெற்ற எஞ்சிய போட்டிகளிலும் சுமாராகவே செயல்பட்ட அவர் இந்த தென் ஆப்ரிக்க தொடரில் 2வது போட்டியில் 4 ஓவரில் 45 ரன்களை கொடுத்த நிலையில் நேற்று இந்தூரில் நடைபெற்ற கடைசி போட்டியிலும் 4 ஓவரில் விக்கெட் எடுக்காமல் 49 ரன்களை கொடுத்தார். மேலும் புவனேஸ்வர் குமார், அர்ஷிதீப் சிங் போன்ற பவுலர்கள் கூட புதிய பந்தை ஸ்விங் செய்து பவர் பிளே ஓவர்களில் அசத்தும் திறமை பெற்றுள்ளனர்.

Harshal-Patel

ஆனால் லெக் கட்டர் மற்றும் ஸ்லோ பந்துகளை மட்டுமே பலமாக கொண்ட இவர் 120 – 130 கி.மீ வேகத்தில் மட்டுமே வீசுவதால் பெரும்பாலான தருணங்களில் போட்டியின் அனைத்து நேரங்களிலும் சரமாரியாக அடி வாங்குகிறார். மொத்தத்தில் பெரும்பாலும் வேகத்துக்கு கை கொடுக்காத ஃப்ளாட்டான இந்திய ஆடுகளங்களிலேயே இந்தளவு திணறும் இவர் 140 கி.மீ வேகத்தில் வீசினால் மட்டுமே ஓரளவு சமாளிக்க கூடிய ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் நடைபெறும் உலகக் கோப்பையில் நிச்சயம் தடுமாறுவார் என்று 90% உறுதியாக கூறலாம்.

- Advertisement -

மோசமான உலக சாதனைகள்:
1. மேலும் காயமடைவதற்கு முன்பிலிருந்தே ரன்களை வாரி வழங்கி வரும் அவர் இந்த வருடம் இது வரை பங்கேற்ற 21 போட்டிகளில் வீசிய 69.1 ஓவர்களில் 22 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்து 650* ரன்களை 9.39 என்ற மோசமான எக்கனாமியில் வாரி வழங்கியுள்ளார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக ரன்களை கொடுத்த பந்து வீச்சாளர் என்ற படுமோசமான உலக சாதனையை அவர் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ஹர்ஷல் படேல் : 650* (2022*)
2. ஹாரீஸ் ரவூப் : 637 (2021)
3. ஷாஹீன் அப்ரிடி : 599 (2021)
4. ஆண்ட்ரூ டை : 587 (2018)

harshal

2. அதே போல் இந்த வருடம் உலக அளவில் நடைபெற்ற சர்வதேச டி20 கிரிக்கெட்டில் குறைந்தது 20 போட்டிகளில் விளையாடிய 30 பந்து வீச்சாளர்களில் இவர் தான் அதிகபட்சமாக 9.39 என்ற படுமோசமான எக்கனாமியை கொண்டுள்ளார்.

- Advertisement -

3. அது போக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக பவுண்டரிகளை (சிக்ஸர்கள் + போர்ஸ்) கொடுத்த பந்து வீச்சாளர் என்ற மோசமான உலக சாதனையும் அவர் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ஹர்ஷல் படேல் : 87* (2022)
2. ஜோஸ்வா லிட்டில் : 85 (2022)
3. ஷாஹீன் அப்ரிடி : 85 (2021)
4. புவனேஸ்வர் குமார் : 80 (2021)

 

இதையும் படிங்க: IND vs SA : கேப்டன் ரோஹித் சர்மாவை தாறுமாறாக கலாய்த்த டிகே – பிணைப்பை பார்த்து ரசிகர்கள் நெகிழ்ச்சி, 2 வைரல் வீடியோ உள்ளே

4. முன்னதாக சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக சிக்சர்களை கொடுத்த பந்து வீச்சாளர் என்ற மோசமான உலக சாதனையையும் சமீபத்திய ஆஸ்திரேலிய தொடரின் போது அவர் ஏற்கனவே படைத்தார். இப்படி பந்து வீச்சில் ரன் மெஷினாக செயல்பட்டு வரும் இவர் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் விளையாடும் முதன்மை பவுலராக தேர்வு செய்யப் பட்டுள்ளதால் இம்முறை நிச்சயம் இந்தியாவுக்கு கோப்பை கிடையாது என்று ரசிகர்கள் மேலும் கவலையடைகிறார்கள்.

Advertisement