சாதனையுடன் வெளியேறிய ஹர்ஷல் பட்டேல். படிக்கல் செய்த தவறால் – மிகப்பெரிய வாய்ப்பு பறிபோனது

Harshal
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. ஏற்கனவே முதலாவது குவாலிபயர் போட்டியில் விளையாடிய சென்னை அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில் ஷார்ஜா மைதானத்தில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் புள்ளி பட்டியலில் மூன்றாம் மற்றும் நான்காம் இடத்தை பிடித்திருந்த பெங்களூர் மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகள் மோதின.

RCBvsKKR

இந்த போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 138 ரன்களை மட்டுமே குவிக்க அடுத்ததாக விளையாடிய கொல்கத்தா அணி 19.4 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பெங்களூர் அணி தோற்றிருந்தாலும் அந்த அணி சார்பாக விளையாடிய ஹர்ஷல் பட்டேல் ஐபிஎல் தொடரில் சாதனையுடன் வெளியேறியுள்ளார்.

- Advertisement -

அந்த சாதனை யாதெனில் நேற்றைய போட்டியில் 4 ஓவர்கள் வீசி 19 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் இந்த தொடரில் மொத்தம் 32 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் ஒரே சீசனில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவராக இருந்த சென்னை அணியின் ஆல்ரவுண்டர் பிராவோவின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.

harshal 1

கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அவர் ஒன்பது சீசன்களாக பந்துவீசி உள்ளார். இதுவரை 63 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 78 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதில் 32 விக்கெட்டுகள் இந்த சீசனில் எடுக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2013ஆம் ஆண்டு அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பிராவோ 18 போட்டிகளில் விளையாடி 32 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : வேர்ல்டுகப்புக்கு இவரை ஏன் செலக்ட் பண்ணீங்க ? இவரால நமக்கு எந்த யூசும் இல்ல – கம்பீர் வெளிப்படை

ஆனால் ஹர்ஷல் பட்டேல் தற்போது 15 போட்டிகளில் மட்டுமே விளையாடி 32 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்றைய போட்டியின் ஹர்ஷல் பட்டேல் வீசிய 17-வது ஓவரில் சுனில் நரைன் கொடுத்த கேட்சை படிக்கல் தவறவிட்டார். ஒருவேளை அதை அவர் பிடித்து இருந்தால் ஒரே சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற வரலாற்று சாதனையை ஹர்ஷல் பட்டேல் படைத்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement