வேர்ல்டுகப்புக்கு இவரை ஏன் செலக்ட் பண்ணீங்க ? இவரால நமக்கு எந்த யூசும் இல்ல – கம்பீர் வெளிப்படை

Gambhir
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்னும் சில தினங்களில் ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடரானது துவங்க உள்ளது. இந்த உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதில் இருந்தே பல முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்திய அணியில் குறிப்பிட்ட சில வீரர்கள் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் குறிப்பிட்ட சில வீரர்கள் நீக்கப்பட்டு இருக்கலாம் என்றும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே இந்திய அணி தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டதால் இனி அந்த அணியில் பெரிய மாற்றம் ஏதும் ஏற்படாது என்று உறுதியாகியுள்ளது.

ind

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியில் தேர்வாகியுள்ள சில வீரர்களது பார்ம் தற்போது கவலைக்கிடமாக உள்ளது. அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான கௌதம் கம்பீர் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்ட ஒரு வீரர் குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியில் தற்போது பேட்டிங் லைனில் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவர் ஹார்டிக் பாண்டியாவாக தான் இருப்பார்.

ஏனெனில் சமீபகாலமாக அவர் பெரிய அளவில் கிரிக்கெட் விளையாடவில்லை. அதுமட்டுமின்றி தற்போது பந்து வீசாமல் இருந்து வரும் அவர் ஒன் டைமென்ஷன் வீரராகவே இருக்கிறார். எனவே என்னைப் பொறுத்தவரை அவரை தேர்வு செய்தது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. ஏனெனில் அவர் இறங்கும் வரிசையில் ஒரு ஆல்ரவுண்டர் இருந்தால்தான் இந்திய அணிக்கு அது பலமாக அமையும்.

pandya 1

ஏனெனில் குறிப்பிட்ட 5 பந்துவீச்சாளர்கள் அனைத்து போட்டிகளிலும் அனைத்து ஓவர்களையும் வீசி விட முடியாது. எனவே ஆல்ரவுண்டர் என்பது அணிக்கு முக்கியம் என்பதால் பந்து வீசாத பாண்டியா ஆல்ரவுண்டர் இடத்தில் தேர்வு செய்தது ஆச்சரியம் அளிக்கிறது என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : உலக கோப்பை தொடரில் பாண்டியா 4 ஓவர்கள் வீசுவாரா ? என்பதற்கு தேர்வு குழுவினர் தான் பதிலளிக்க வேண்டும்.

- Advertisement -

இதையும் படிங்க : இவரால இந்திய அணிக்கே ஆபத்து ஏற்படப்போகுது. என்ன நடக்குமோ – சுனில் கவாஸ்கர் ஓபன்டாக்

இன்னும் சில நாட்களில் துவங்க உள்ள இந்த தொடருக்கு இந்திய அணி தற்போது தயாராக இருக்க வேண்டும் என கம்பீர் கூறியது குறிப்பிடத்தக்கது. அவர் போலவே ஏற்கனவே பல முன்னாள் வீரர்களும் பாண்டியாவின் பௌலிங் குறித்து பேசியுள்ளனர். குறிப்பாக இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கரும் பாண்டியா பந்து வீசாமல் இருப்பது இந்திய அணிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement