2023 உ.கோ தொடரில் தார் ரோட் போடுங்க பரவால்ல.. ஆனா கொஞ்சம் அதையும் செய்ங்க.. பிசிசிஐ’யை கலாய்த்த சாஸ்திரி, போக்லே

Indian Commentators
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே கோப்பையை நழுவ விட்டது. மறுபுறம் ஆசிய கோப்பையை தொடர்ந்து இத்தொடரிலும் கேஎல் ராகுல் தலைமையில் வென்ற இந்தியா ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக முன்னேறி சாதனை படைத்தது.

அந்த நிலைமையில் இத்தொடரின் சம்பிரதாய கடைசி போட்டி செப்டம்பர் 27ஆம் தேதி சௌராஷ்டிராவில் இருக்கும் ராஜ்கோட் நகரில் மதியம் 1.30 மணிக்கு துவங்கியது. அதில் கேப்டன் பட் கமின்ஸ், ஸ்டார்க், மேக்ஸ்வெல் இந்த முக்கிய வீரர்கள் திரும்பியதால் ஆஸ்திரேலியா முழு பலத்துடன் களமிறங்கிய நிலையில் இந்திய அணியில் இசான் கிசான், கில், ஹர்டிக் பாண்டியா உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது.

- Advertisement -

கலாய்த்த சாஸ்திரி:
அந்த நிலைமையில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு டேவிட் வார்னர் அதிரடியாக விளையாடி விரைவாக நாங்கள் சேர்த்தார் குறிப்பாக கடந்த போட்டியில் 400 ரன்களை இலக்காக கொடுத்த இந்தியாவை இம்முறை அடித்து நொறுக்கும் வகையில் பேட்டிங் செய்த அவருடன் சேர்ந்து மிட்சேல் மார்ஷ் தம்முடைய பங்கிற்கு விரைவாக ரன்களை சேர்த்தார்.

ஆனால் அவர்கள் அடித்து நொறுக்கும் அளவுக்கு ராஜ்கோட் மைதானம் வேகம், பவுன்ஸ், சுழல் என எதுக்குமே சாதகமாக இல்லாமல் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக தார் ரோடு போல இருந்தது. குறிப்பாக கடந்த போட்டி நடைபெற்ற இந்தூர் மைதானத்தை விட பவுலர்களுக்கு கை கொடுக்காமல் பிட்ச் இருந்ததால் “இந்தியாவிலேயே ராஜ்கோட் மிகச் சிறந்த அதிவேக சாலைகளில் ஒன்று” என நேரலையில் வர்ணனையாளராக செயல்பட்ட முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி கிண்டலடித்தார்.

- Advertisement -

அதற்கேற்றார் போல் முதல் 8 ஓவரில் ஆஸ்திரேலியா 78/0 ரன்கள் எடுக்க உதவிய வார்னர் 6 பவுண்டரின் 4 சிக்சருடன் 56 (34) ரன்கள் குவித்து நல்ல துவக்கத்தை கொடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய மார்ஷ் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 13 பவுண்டரி 3 சிக்சருடன் குல்தீப் பந்தில் 96 (84) ரன்களில் அவுட்டானார். இருப்பினும் மறுபுறம் ஸ்மித் 61* (50) ரன்கள் எடுத்ததால் 28 ஓவர்களிலேயே ஆஸ்திரேலியா 215/2 ரன்கள் எடுத்தது.

இந்த நிலையில் விரைவில் நடைபெறும் உலகக் கோப்பையில் இதே போன்ற மைதானங்கள் தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் பிரபல தொகுப்பாளர் ஹர்ஷா போக்லே “இது போன்ற சாலைகளை நாம் உருவாக்கினால் குறைந்தபட்சம் பவுண்டரிகளின் அளவையாவது பெரிதாக்க வேண்டும். குறிப்பாக இது போன்ற போதுமான அளவு இடம் இருக்கும் மைதானங்களில் அதை செய்ய வேண்டும்” என்று பிசிசிஐ’யை ட்விட்டரில் மறைமுகமாக கலாய்த்துள்ளார்.

Advertisement