எல்கர் 185 ரன்ஸ்.. அவ்ளோ தான் முடிஞ்ச்சு.. இந்திய அணியின் ஆட்டதால் ஹர்ஷா போக்லே கவலை

Harsha Bhogle 2
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீசுவது அறிவித்தது. டிசம்பர் 26ஆம் தேதி செஞ்சூரியன் நகரில் துவங்கிய அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் இன்னிங்ஸில் 245 ரன்கள் மட்டுமே எடுத்தது.

விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற முதன்மை வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்கத் தவறிய நிலையில் அதிகபட்சமாக கே.எல் ராகுல் போராடி 101 ரன்கள் எடுத்தார். தென்னாபிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ககிசோ ரபாடா 5 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா ஆரம்பத்திலேயே சிறப்பாக விளையாடி 2வது நாளில் 256/5 ரன்கள் குவித்து இந்தியாவை விட 11 ரன்கள் முன்னிலை பெற்றது.

- Advertisement -

கைநழுவும் வெற்றி:
அந்த அணிக்கு தம்முடைய கடைசி தொடரில் விளையாடும் டீன் எல்கர் சதமடித்து 140* ரன்கள் குவித்து அசத்தினார். அதன் காரணமாக இன்று துவங்கிய 3வது நாள் ஆட்டத்தில் முதல் சில மணி நேரங்களிலேயே தென்னாப்பிரிக்காவை ஆல் அவுட் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்கியது.

ஆனால் அதற்காக பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோர் துல்லியமாக பந்து வீசி போராடிய போதிலும் பிரசித் கிருஷ்ணா மற்றும் சர்துள் தாக்கூர் ஆகியோர் மீண்டும் சுமாரான லைனில் பந்து வீசி ரன்களை வாரி வழங்கினர். அதை சரியாக பயன்படுத்தி எளிதாக பேட்டிங் செய்த டீன் எல்கர் இரட்டை சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட 28 பவுண்டரியுடன் 185 ரன்கள் குவித்து ஒரு வழியாக தாக்கூர் வேகத்தில் அவுட்டானார்.

- Advertisement -

அவருடன் பேட்டிங் செய்து வரும் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டரான மார்க்கோ யான்சன் இந்திய பவுலிங்கை அசால்டாக எதிர்கொண்டு அரை சதம் கடந்து 72* ரன்கள் எடுத்துள்ளார். அதன் காரணமாக 3வது நாள் உணவு இடைவெளியில் தென்னாப்பிரிக்கா 392/7 ரன்கள் எடுத்து இந்தியாவை விட 147 ரன்கள் முன்னிலை பெற்று இப்போட்டியில் வலுவான நிலையை எட்டியுள்ளது.

இதையும் படிங்க: தோனி எனக்கு ஆதரவு கொடுத்தாரு.. ஆனா எனக்கு புடிச்ச கேப்டன் இவர்தான் – பார்த்திவ் படேல் ஓபன்டாக்

அதனால் இப்போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு கைநழுவி போயுள்ளதாக ட்விட்டரில் பிரபல தொகுப்பாளர் ஹர்ஷா போக்லே ஏமாற்றத்துடன் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “போட்டி கை நழுவி செல்கிறது. தைரியமாக நான் சொல்ல வேண்டுமெனில் கிட்டத்தட்ட வெற்றி சென்று விட்டது” என்று கூறியுள்ளார். மேலும் முதல் இன்னிங்ஸிலேயே இந்திய பேட்டிங் திண்டாடிய நிலையில் இந்த பவுலிங்கை வைத்துக்கொண்டு வெற்றி பெற முடியாது என ரசிகர்களும் பேசி வருகின்றனர். அதனால் இந்த போட்டியை இந்தியா டிரா செய்தாலே அது பெரிய முயற்சியாக இருக்கும் என்று ரசிகர்கள் கவலையடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement