தோனி எனக்கு ஆதரவு கொடுத்தாரு.. ஆனா எனக்கு புடிச்ச கேப்டன் இவர்தான் – பார்த்திவ் படேல் ஓபன்டாக்

Parthiv-Patel
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் வீரரான பார்த்திவ் படேல் கடந்த 2002-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி 2018-வரை 25 டெஸ்ட் போட்டிகள், 38 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அது தவிர்த்து ஐபிஎல் தொடரிலும் 139 ஆட்டங்களில் பங்கேற்றுள்ளார். தற்போது 38 வயதாகும் பார்த்திவ் படேல் 20 ஆண்டுகளுக்கு மேல் கிரிக்கெட் விளையாடிய அனுபவம் உடையவர்.

தன்னுடைய 17-ஆவது வயதிலேயே இந்திய அணிக்காக அறிமுகமாகி இருந்தாலும் நாளடைவில் தோனியின் வருகை காரணமாக தனது இடத்தை இழந்த அவர் அவ்வப்போது கிடைக்கும் வாய்ப்புகளை பெற்று விளையாடி வந்தார். அதன்பிறகு ஐபிஎல் தொடரிலும் சிஎஸ்கே அணியில் தோனியின் தலைமையின் கீழ் அவர் மூன்று சீசன்கள் விளையாடி உள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விதான் தற்போது இணையத்தில் அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் அந்த பேட்டியின் போது :

தோனி மற்றும் கங்குலி இவர்கள் இருவரில் உங்களுக்கு பிடித்த கேப்டன் யார்? என்ற கேள்வி அவரிடம் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பார்த்திவ் படேல் கூறுகையில் : கங்குலி தோனி இருவருமே சிறந்த கேப்டன்கள் தான் அதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. முதலில் ஒரு கேப்டனாக நாம் நினைக்கும் வீரர் நம் மனதிற்கு நெருக்கமாக இருக்க வேண்டும்.

- Advertisement -

அந்த வகையில் நான் சிஎஸ்கே அணிக்காக மூன்று வருடம் தோனியின் தலைமையில் விளையாடி உள்ளேன். நான் சரியான ஃபார்மில் இல்லாத போதும் தோனி என்னை ஆதரித்து சென்னை அணியில் விளையாட வைத்திருந்தார். அந்த பெருமை அவரே சேரும். ஆனால் தோனிக்கு முன்னதாகவே என்னை மிக இளம் வயதிலேயே டெஸ்ட் மற்றும் ஒருநாள் என சர்வதேச போட்டிகளில் கங்குலி அறிமுகப்படுத்தியிருந்தார்.

இதையும் படிங்க : 3 நாள் முன்னாடி போன கூட இந்தியாவை தோற்கடிக்கலாம்.. விமர்சித்த முன்னாள் வீரருக்கு.. ஸ்டோக்ஸ் பதிலடி

கங்குலி எப்போதுமே வீரர்களுக்கு ஆதரவாக நிற்கக்கூடிய ஒரு கேப்டன். என்னை பொருத்தவரை எனது கேப்டன் என்றால் நான் கங்குலியையே தேர்வு செய்கிறேன் என்று கூறியுள்ளார். அவரது இந்த பதில் தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement