3 நாள் முன்னாடி போன கூட இந்தியாவை தோற்கடிக்கலாம்.. விமர்சித்த முன்னாள் வீரருக்கு.. ஸ்டோக்ஸ் பதிலடி

Steve Harmison
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இந்த தொடருக்கு அடுத்தபடியாக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் பென் ஸ்டோக்ஸ் – ப்ரெண்டன் மெக்கல்லம் ஆகியோர் புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளராக பொறுப்பேற்றது முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல அதிரடியாக விளையாடி வரும் இங்கிலாந்து நிறைய வெற்றிகளை குவித்து வருகிறது. அந்த வரிசையில் வலுவான இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்து தோற்கடிக்குமா என்ற எதிர்பார்ப்பு உலகின் மற்ற ரசிகர்களிடமும் இருக்கிறது என்றே சொல்லலாம்.

- Advertisement -

3 நாள் முன்னாடி:
ஏனென்றால் கடைசியாக 2012இல் இங்கிலாந்துக்கு எதிராக தோல்வியை சந்தித்த இந்தியா அதன் பின் கடந்த 11 வருடமாக உலகின் எந்த அணிக்கு எதிராகவும் தங்களுடைய சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்காமல் எதிரணிகளை மிரட்டி வருகிறது. எனவே இங்கிலாந்தின் அதிரடியான அணுகுமுறை இந்திய மண்ணில் செல்லுபடியாகுமா என்பதை பார்க்க அனைவரும் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் 2024 ஜனவரி 25ஆம் தேதி துவங்கும் இத்தொடருக்காக இங்கிலாந்து அணையினர் எவ்விதமான பயிற்சிகளையும் மேற்கொள்ளாமல் இருப்பது ஏமாற்றத்தை கொடுப்பதாக முன்னாள் ஸ்டீவ் ஹர்மிசன் விமர்சித்துள்ளார். குறிப்பாக 3 நாட்கள் முன்பாக சென்றால் கூட இந்தியாவை தோற்கடித்து விடலாம் என்பது போல் இங்கிலாந்து அணியின் தற்போதைய நிலைப்பாடு இருப்பதாக ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“3 நாட்களுக்கு முன்பாக சென்றால் கூட இங்கிலாந்து 5 – 0 என்ற கணக்கில் வெல்வதற்கு தகுதியானவர்கள். அவர்கள் அதை செய்வார்கள். அதாவது நான் பழைய காலத்து ஆளாக இருப்பதால் அவர்கள் இதைத்தான் என்னிடம் சொல்வார்கள். என்னைப் பொறுத்த வரை காலமும் போட்டியும் மாறினாலும் வெற்றிக்காக நீங்கள் தயாராகும் முறைகள் மாறுவதில்லை. இதுவே ஆஷஸ் தொடராக இருந்தால் இப்படி நீங்கள் இருப்பீர்களா. இந்தியாவுக்கு நீங்கள் முழுமையாக தயாராகாமல் செல்ல முடியாது”

இதையும் படிங்க: இந்திய அணி இப்படி சரிவை சந்திக்க அவங்க 2 பேர் தான் காரணம். மோசமான பவுலிங் – ஜாஹீர் கான் சாடல்

“சொல்லப்போனால் நீங்கள் அதிகமாகவும் பயிற்சிகளை எடுத்து செல்லக்கூடாது. தொடர் துவங்குவதற்கு 6 வாரங்கள் முன்பாக நீங்கள் இந்தியாவில் இருந்தாலும் முதல் போட்டிக்கு தயாராக இருக்க மாட்டீர்கள்” என்று கூறினார். அவருடைய கருத்தை பார்த்த பென் ஸ்டோக்ஸ் “இந்தியாவுக்கு செல்வதற்கு முன்பாக நாங்கள் அபுதாபியில் பயிற்சி முகாம் ஒன்றில் ஈடுபட உள்ளோம். அத்துடன் முதல் போட்டிக்கு முன்பாக இன்னும் நிறைய பயிற்சிகளை எடுக்க உள்ளோம்” என்று ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement