டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்து அறிவித்த ஹர்ஷா போக்ளே – லிஸ்ட் இதோ

Bhogle
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற இருந்த ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடரானது இங்கு நடைபெறயிருந்த நிலையில் இங்கு பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளில் நடைபெறும் என ஏற்கனவே ஐசிசி அறிவித்து இருந்தது. அதன்படி தற்போது அனைத்து அணிகளும் இந்த டி20 உலக கோப்பையில் விளையாடுவதற்கான அணியை தேர்வு செய்து வருகின்றன.

cup

- Advertisement -

மேலும் 2007 ஆம் ஆண்டு முதலாவது டி20 உலக கோப்பை தொடரை வென்ற இந்திய அணி ஆனது அதன் பிறகு ஒரு முறை கூட டி20 கோப்பையை கைப்பற்றவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணி 2 முறை உலகக்கோப்பையை கைப்பற்றி முதலிடத்தில் இருக்கும் நிலையில் இம்முறை உலகக் கோப்பையை கைப்பற்றி இரண்டாவது முறையாக டி20 கோப்பையை வென்ற பெருமையை பெற இந்திய அணி கடுமையாக முயற்சிக்கும் என்று தெரிகிறது.

இந்நிலையில் இந்த டி20 உலககோப்பை தொடருக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம் பெறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏனெனில் தற்போது இந்திய அணியில் ஏகப்பட்ட வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் இந்த தொடருக்கான அணியில் தேர்வு எவ்வாறு அமையப் போகிறது என்பது பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.

IND

இந்நிலையில் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரான ஹர்ஷா போக்ளே டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்து அறிவித்துள்ளார். அதில் துவக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் ராகுல் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். மிடில் ஆர்டரில் கோலி, சூரியகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர் / இஷான் கிஷன் ரிஷப் பண்ட் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். ஆல்ரவுண்டராக ஹார்டிக் பாண்டியா, ஜடேஜா ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.

- Advertisement -

பாஸ்ட் பவுலர்களாக தீபக் சாகர், முகமது ஷமி/நடராஜன், பும்ராவையும் தேர்வு செய்துள்ளார். ஸ்பின்னர்களாக சாஹல், வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருன் சக்ரவர்த்தி ஆகியோரை அணியில் தேர்வு செய்துள்ளார். இந்த அணி நிச்சயம் உலகக்கோப்பையை வெல்ல தகுதியான அணி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஹர்ஷா போக்ளே தேர்வு செய்த அணி இதோ :

1) ரோஹித் சர்மா, 2) கே.எல் ராகுல், 3) விராட் கோலி, 4) சூரியகுமார் யாதவ், 5) ஷ்ரேயாஸ் ஐயர்/இஷான் கிஷன், 6) ரிஷப் பண்ட், 7) ஹார்டிக் பாண்டியா, 8) ரவீந்திர ஜடேஜா, 9) தீபக் சாகர், 10) பும்ரா, 11) முகமது ஷமி/நடராஜன், 12) வருண் சக்ரவர்த்தி, 13) சாஹல், 14) வாஷிங்க்டன் சுந்தர்

Advertisement