இவரை எதுக்கு அணியில் சேர்த்தீங்க. கடுப்பாகி பதிவை தட்டிவிட்ட ஹர்ஷா போக்லே – விவரம் இதோ

ind-2
- Advertisement -

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தற்போது நடைபெற்று வருகிறது இந்திய அணி முதலில் பேட்டிங் 165 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி இந்திய ரசிகர்களை ஏமாற்றி உள்ளது. இதனால் அணியின் தேர்வில் குழப்பம் ஏற்பட்டு விட்டதாக பலரும் இந்திய அணியைசாடி வருகின்றனர்.

Ind

- Advertisement -

குறிப்பாக ரவீந்திர ஜடேஜாவா, அஸ்வினா என்று பார்க்கப்பட்ட போது சுழல் பந்துவீச்சு என்று அஸ்வின் எடுக்கப்பட்டார். இருப்பினும் இந்த பேட்டிங்கில் இந்திய அணி சொதப்பிவிட்டது . ஜடேஜா இருந்திருந்தால் தன் பங்கிற்கு சில ரன்களை சேர்த்திருப்பார் .அதேபோல் விக்கெட் கீப்பராக விருத்திமான் சஹா இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இறுதியில் பண்ட் விளையாடி வருகிறார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ள பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே குறிப்பிட்டதாவது : தூங்கி எழுந்தவுடன் சகா அணியில் இல்லை என்பதை பார்த்தேன் .தற்போது இந்திய விக்கெட் கீப்பர்களிடம் விக்கெட் கீப்பிங் சிறந்து விளங்குங்கள் என்று கூறாமல், பேட்டிங்கில் ரன்களை சேர்க்க வேண்டும் என்பது போல் உள்ளது இந்த தேர்வு.

Bhogle

நான் சொல்வதை தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள் இது ரிஷப் பண்ட்டை பற்றிய விஷயம் அல்ல . டெஸ்ட் போட்டிகளில் ஆடும் போது மிகச் சிறந்த 5 பேட்ஸ்மேன்கள் சிறந்த 4 பந்துவீச்சாளர்கள், விக்கெட் கீப்பிங் திறமை வாய்ந்த கீப்பர் ஆகியோரை எடுக்க வேண்டும். ரிஷப் பண்ட் நல்ல வீரர்தான் ஆனால் விருத்திமான் சஹவிற்காக நான் வருந்துகிறேன் என்று பதிவு செய்துள்ளார்.

Advertisement