அந்த ஏரியால கண்டம் இருக்கு.. 2024 டி20 உ.கோ முன் சரி பண்ணுங்க.. இந்திய அணி எச்சரித்த ஹர்ஷா போக்லே

Harsha Bhogle
- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று முடிந்த டி20 கிரிக்கெட் தொடரை 1 – 1 (3) என்ற கணக்கில் இந்தியா போராடி சமன் செய்தது. 2023 உலகக் கோப்பையில் தோல்வியை சந்தித்த இந்தியா அடுத்ததாக 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் பயணத்தை துவங்கியுள்ளது. அந்த பயணத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று முடிந்த தொடரை வென்ற இந்தியா தற்போது தென்னாப்பிரிக்க தொடரை சமன் செய்துள்ளது.

குறிப்பாக விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற சீனியர் வீரர்கள் இல்லாமலேயே சூரியகுமார் யாதவ் தலைமையில் இளம் வீரர்களுடன் இத்தொடர்களில் களமிறங்கி இந்திய அணி சிறப்பாக விளையாடியது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இருப்பினும் இந்திய அணியில் சில முக்கியமான பிரச்சனைகள் இருப்பது இந்த 2 தொடர்களிலும் நன்றாக தெரிந்தது.

- Advertisement -

சீக்கிரம் சரிபண்ணுங்க:
எடுத்துக்காட்டாக முதன்மையான 5 பவுலர்கள் தடுமாறும் போது அதை சமாளிப்பதற்காக 6வது பகுதி நேர பவுலர் இல்லாதது முக்கிய பிரச்சினையாக இருந்தது. அத்துடன் டெத் ஓவர்களில் ஏறத்தாழ தற்போதைய அணியில் உள்ள அனைத்து பவுலர்களுமே ரன்களை வாரி வழங்கி 2 தோல்விகளை சந்திப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தார்கள்.

அதனால் பும்ராவை தவிர்த்து டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசுவதற்கு வேறு ஆள் இல்லை என்ற நிலைமை இந்திய அணியில் நீடிக்கிறது. இந்நிலையில் இந்த தென்னாப்பிரிக்க தொடரின் 2வது போட்டியிலும் 3வது போட்டியிலும் பவர் பிளே முடிந்ததும் இந்திய பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து அதிரடியாக விளையாடாமல் சற்று மெதுவாக விளையாடியது பெரிய ரன்களை குவிப்பதற்கான வேகத்தை தடை செய்வதாக பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே தெரிவித்துள்ளார்.

- Advertisement -

எனவே 2024 20 உலகக் கோப்பைக்கு முன்பாக பவர்பிளே முடிந்ததும் தொடர்ந்து அதிரடியாக விளையாடுவதற்கான அணுகுமுறையை இந்தியா கையிலெடுக்க வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “கடந்த டி20 போட்டியை போலவே இந்த போட்டியிலும் 7 – 10 வரையிலான ஓவர்கள் வலையில் இந்தியா விழுந்தது. ஏனெனில் இந்த 2 போட்டிகளிலுமே அந்த 4 ஓவர்களில் இந்தியா தலா 25 ரன்கள் மட்டுமே எடுத்தது”

இதையும் படிங்க: காயத்தால் தெ.ஆ டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக விளையாடுவீங்களா? ஷமி சொன்ன குழப்பமான பதில்

“எனவே டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக பவர் பிளே முடிந்ததும் வரும் ஓவர்களில் வேகத்தை குறைக்காமல் உடனடியாக இந்தியா முடிந்தளவுக்கு அதிக ரன்கள் குவிப்பதற்கான வழியை கண்டறிய வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார். அவர் கூறுவது போல இப்போதெல்லாம் 240 ரன்கள் அடித்தாலும் அதை எதிரணிகள் சேசிங் செய்வதற்கு அதிக வாய்ப்புள்ளது என்பதால் பவர் பிளே முடிந்ததும் இந்தியா சற்று வேகத்தை குறைக்காமல் தொடர்ந்து அதிரடியாக விளையாடுவது வெற்றிக்கு அவசியமாகிறது.

Advertisement