- Advertisement -
இந்திய கிரிக்கெட்

நாங்க விட்ட அந்த கேட்சால மேட்ச் போச்சு.. தோல்விக்கு பின்னர் இங்கிலாந்து கேப்டன் வருத்தம் – விவரம் இதோ

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் மிக முக்கியமான அரையிறுதி போட்டியானது நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் மோதிய வேளையில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது.

தோல்விக்கு நாங்க செய்த இந்த தப்பு தான் காரணம் : ஹாரி புரூக்

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இறுதி போட்டிக்கான வாய்ப்பையும் உறுதி செய்தது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இணைந்து 253 ரன்கள் குவித்தது.

- Advertisement -

பின்னர் அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 246 ரன்கள் குவித்ததால் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பெற்றது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் கூறுகையில் :

உண்மையிலேயே இந்த போட்டியில் நாங்கள் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் நாங்கள் நினைத்தது சுழற்பந்து வீச்சுக்கு இந்த சாதகம் ஒத்துழைக்கவில்லை. அதேபோன்று எங்களது அணியின் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு இருந்தாலும் சஞ்சு சாம்சன் தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார்.

- Advertisement -

இதையும் படிங்க : இன்னும் எவ்ளோ தான் ரன் அடிக்கனும்.. வெற்றிக்கு பிறகு இங்கிலாந்து வீரர்களை பாராட்டிய – சூரியகுமார் யாதவ்

அவருக்கு எதிராக நாங்கள் தவறவிட்ட கேட்ச் இந்த போட்டியின் முடிவை மாற்றியது. அதனை பயன்படுத்தி அவர் மிகச்சிறப்பாக ரன் குவித்திருந்தார். ஒட்டுமொத்தமாகவே இந்த போட்டியில் நாங்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருந்தாலும் பலமான இந்திய அணிக்கு எதிராக தோல்வியை அடைந்ததை நினைத்து சற்று வருத்தமாக உள்ளதாகவும் ஹாரி புரூக் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -