- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பர்மிங்காமில் இங்கிலாந்துக்கு பயந்து அதை செஞ்ச இந்தியாவை.. அந்த பயத்தை வெச்சே தோற்கடிப்போம்.. ஹாரி ப்ரூக்

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றன. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்தை 2வது போட்டியில் இந்தியா 336 ரன்கள் வித்யாசத்தில் தோற்கடித்தது. அதனால் இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்த இந்தியா பர்மிங்காம் மைதானத்தில் வெற்றி பெற்ற முதல் ஆசிய அணியாக சாதனை படைத்தது.

ஆனால் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 3வது போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை போராடி தோற்கடித்த இங்கிலாந்து 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து 4வது போட்டி ஜூலை 23ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் துவங்குகிறது. அந்த மைதானத்தில் வரலாற்றில் ஒருமுறை கூட இங்கிலாந்தை தோற்கடித்து இந்தியா வென்றது கிடையாது.

- Advertisement -

பயந்த இந்தியா:

எனவே பர்மிங்காம் போல மான்செஸ்டரிலும் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி இங்கிலாந்தை தோற்கடித்து சரித்திர வெற்றியைப் பெற்று தொடரை சமன் செய்யத் தயாராகியுள்ளது. இந்நிலையில் பர்மிங்காம் மைதானத்தில் நடைபெற்ற 2வது போட்டியில் இந்தியா தங்களுக்கு பயந்து 608 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்ததாக இங்கிலாந்தின் ஹாரி ப்ரூக் தெரிவித்துள்ளார். அதாவது இங்கிலாந்து அணி பஸ்பால் என்ற பெயரில் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல அதிரடியாக விளையாடும் அணுகுமுறையைப் பின்பற்றுகிறது.

அதனால் முதல் போட்டியில் 376 ரன்கள் சேசிங் செய்த இங்கிலாந்து அணி இந்தியாவை தோற்கடித்தது. அப்போது 2வது போட்டியில் இந்தியா எந்த இலக்கை கொடுத்தாலும் சேசிங் செய்வோம் என்று ஹாரி ப்ரூக் தெரிவித்திருந்தார். அதற்கு பயந்து கொண்டு தான் 2வது போட்டியில் இந்தியா 500+ ரன்களை இலக்காக நிர்ணயிக்காமல் 608 ரன்களை நிர்ணயித்ததாக ப்ரூக் கூறியுள்ளார்.

- Advertisement -

கெத்தாக பேசிய ப்ரூக்:

அந்த பயத்தால் கிடைத்த தன்னம்பிக்கையைப் பயன்படுத்தி இந்தியாவை எஞ்சிய போட்டிகளிலும் தோற்கடித்து இங்கிலாந்து தொடரை வெல்வோம் என்று கூறும் ப்ரூக் இது பற்றி பேசியது பின்வருமாறு. “எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இந்தியா எங்களுக்கு அபத்தமான இலக்கைக் கொடுத்ததை நாங்கள் பார்த்தோம். நாங்கள் எட்டக்கூடிய இலக்கை கொடுப்பதற்கு அவர்கள் கொஞ்சம் பயந்து விட்டார்கள். எனவே அவர்களுடைய எண்ணம் எங்களுக்கு சாதகமாக விளையாடியது”

இதையும் படிங்க: அது மட்டும் கொஞ்சம் உதவிருந்தா.. லார்ட்ஸில் இந்தியாவை ஜெய்க்க வெச்சுருப்பேன்.. சிராஜ் சோகமான பேட்டி

“அது எஞ்சிய போட்டிகளில் முன்னோக்கிச் செல்லும் போது எங்களுக்கு நிறைய தன்னம்பிக்கையைக் கொடுக்கிறது. முதல் போட்டியில் 376 ரன்களை சேசிங் செய்தது நம்ப முடியாத வெற்றியாகும். கடந்தல் போட்டியில் கடைசி விக்கெட்டை எடுப்பதற்கு நாங்கள் காட்டிய போராட்டம், திறன், பொறுமை சிறப்பானது. பென் ஸ்டோக்ஸ் பவுலிங் பார்ப்பதற்கு அபாரமாக இருந்தது. அந்தப் போட்டியை அனைவரும் இருக்கையின் விளிம்பு வரை வந்து பார்த்திருப்பார்கள் என்று நம்புகிறேன்” எனக் கூறினார்.

- Advertisement -